வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது.

Drinking water to Chennai by train From Jolarpettai

சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதே நேரம், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜோலார்பேட்டை அருகேயிலுள்ள பாசம்பேட்டை ரயில்வே கேட் அருகே சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகள், தினமும் எவ்வளவு தண்ணீர் எடுத்து செல்ல முடியும் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், மேட்டுசக்கறகுப்பம் நீர்தேக்க தெட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு நேரடியாக தண்ணீர் குழாய் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

வறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை வறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை கலங்கரை விளக்கம் அருகே ஆழ்துளை கிணறு மூலம் அமைக்கப்பட்ட 5 அடிபம்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை பகுதியில் முதல்முறையாக அடி பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை அருகே இருந்தாலும், குடிநீர் சுவையாக இருப்பதாக நொச்சிக்குப்பம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

English summary
Drinking water board officials Inspected: Drinking water to Chennai by train From Jolarpettai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X