சரக்கு வாங்கிய சந்தோஷம்.. பாட்டிலுடன் எட்டுக் கட்டையில் பாட்டுப் பாடிய பாட்டி.. வீடு விளங்கிரும்!
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் சரக்கு வாங்கிய சந்தோஷத்தில் எட்டுக் கட்டையில் பாட்டு பாடிய பாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னையை தவிர தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனால் சரக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் அதிகாலை 6 மணிக்கே கடைகள் முன் ஆஜராகினர் குடிமகன்கள். ஒரு சில இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.

கைத் தட்டி ஆரவாரம்
மக்கள் அப்படியே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு மதுபானங்களை வாங்கி மகிழ்ந்தனர். ஒரு சிலர் குடிமக்கள் கடைகளை திறந்தவுடன் விசில் அடித்தும் கைத் தட்டியும் வரவேற்றனர்.

நீண்ட நேரம்
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் இன்று மதுபான கடை திறக்கப்பட்டது. அப்போது மது வாங்க ஒரு பாட்டி நீண்ட நேரம் காத்திருந்தார். பின்னர் 4 பாட்டிலை வாங்கிக் கொண்டு அங்கேயே மறைவான இடத்தில் குடித்தார்.

வீடியோ
பின்னர் போதை தலைக்கேறியவுடன் "ஒரு பொன்மானை தேடி பாடலை எட்டுக் கட்டையில் பாடியுள்ளார். இவர் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பாட்டியின் குரல் வெங்கல குரல் போன்று இருந்தது. அங்கிருந்த குடிமகன்களும் பாட்டியின் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

செம ஆட்டம்
இது போல் சேலம் மாவட்டத்திலும் ஒரு தாத்தா செமையாக குத்தாட்டம் போட்டார். எல்லா இடங்களிலும் குடிகாரர்கள் திருவிழாவுக்கு செல்வது போல் அமர்க்களமாக சென்றது. இதில் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்லாட்டுகளில் வராமல் காலையிலேயே குவிந்தனர்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications