வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’நக்சலைட் ஏரியா’ ஆந்திராவிலிருந்து கஞ்சா..! ‘ஒருவரால்’ மட்டும் தடுக்க முடியாது -அமைச்சர் துரைமுருகன்

Google Oneindia Tamil News

வேலூர் : ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக கஞ்சா வருகிறது, இதனை ஒருவரால் மட்டும் தடுக்க முடியாது எனவும் ஆகவே அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Recommended Video

    Edappadi ஊழல் supreme courtக்கு போய்ட்டு வரட்டும் |Duraimurugan thuglife *Politics | Oneindia Tamil

    வேலூர் மாவட்டம்,வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடந்தது.

    சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு போதை பொருட்களான கஞ்சா உள்ளிட்டவைகளுக்கு எதிரான உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    பீகார்: அமைச்சர் பதவிக்காக முட்டி மோதும் காங். எம்.எல்.ஏக்கள்.. டெல்லிக்கும் கோஷ்டிகளாக படையெடுப்பு பீகார்: அமைச்சர் பதவிக்காக முட்டி மோதும் காங். எம்.எல்.ஏக்கள்.. டெல்லிக்கும் கோஷ்டிகளாக படையெடுப்பு

    அமைச்சர் துரைமுருகன்

    அமைச்சர் துரைமுருகன்

    பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையி," சாலையின் உள்ள போர்வெல்லுடன் கால்வாய் அமைத்தவர்கள் அதிமுக ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு ஒப்பந்தத்தில் முன் அனுபவமில்லை . இதனை இந்த அரசாங்கம் ஆட்சியரிடம் சொல்லி மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    இந்த ஒப்பந்தம் யார் எடுத்தார்கள் என அரசாங்கம் சட்டபடி நடவடிக்கை எடுக்கும். பொதுப்பணித்துறையில் தின கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் 14 மாதங்களில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். அவர் ஊரை சுற்றி வரட்டும் பார்த்து கொள்ளலாம்.

    கஞ்சா கடத்தல்

    கஞ்சா கடத்தல்

    போதை பொருளை ஒரு ஆளால் தடுக்க முடியாது. இது ஆந்திராவிலிருந்து ஆயிரம் வழிகளில் வேலூர் மாவட்டம் வழியாகவும் தமிழகத்திற்குள் வருகிறது. கிருஷ்ணகிரிலிருந்து -கும்மிடிப்பூண்டி வரையில் பல்வேறு வழிகளில் ஆந்திராவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     நச்சலைட்டுகள்

    நச்சலைட்டுகள்

    ஆந்திராவில் வன பகுதிகளில் கஞ்சா செடி வளர்க்கின்றனர் அங்கு யாரும் செல்லமாட்டார்கள் அது நச்சலைட்டுகள் பகுதி. ஆளுநருடன் ரஜினி பேசிய அரசியல் சொல்ல முடியாத அரசியல். ஆளுநர் நாங்கள் அனுப்பி மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது ஜனநாயக புறம்பானது. ஆளுநர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும்." என்றார்.

    English summary
    Water Resources Minister Duraimurugan has said that ganja is coming from Andhra Pradesh to Tamil Nadu ;ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருகிறது, இதனை ஒருவரால் மட்டும் தடுக்க முடியாது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X