வேலூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தப்பி ஓட்டம்.. மயங்கி விழுந்த மணமகள்.. பெரிய ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் சலூன் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மணமகன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.. தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தப்பி ஓடிச்சென்றதால் திருமணம் நின்றது; இதனால் மணமகள் மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வது என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்து முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நவம்பர் 20ம தேதியான நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் செய்து கொண்டிருந்தனர். நிச்சயித்தபடி நேற்று காலை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்தையொட்டி நேற்றிரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இருதரப்பு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள். நேற்று காலையில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. சுமார் 9 மணி அளவில் மணக்கோலத்தில் மணமகள் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
முன்னதாக காலை 8 மணி அளவில் மணமகன் ஐயப்பன், சலூன் கடைக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் மணமகன் வராததால் அனைவரும் பதறிப்போனார்கள்.
மணமகள் மணமேடையில் அமர்ந்திருந்த நிலையில் சடங்குகள் செய்வதற்காக, புரோகிதர் மணமகனை அழைத்திருக்கிறார். ஆனால் மணமகன் ஐயப்பன் வரவே இல்லை. இரு தரப்பும் மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை மணமகன் எங்கு சென்றார் என தெரியாமல் தவித்தனர். மணமேடையில் அமர்ந்திருந்த மணமகளும் பதற்றத்திற்கு உள்ளாகினார்கள்.
இதையடுத்து இருதரப்பினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மணமகன் ஐய்யப்பனை தேடினர். அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' என வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். காலை 10.30 மணி வரை தேடியும் மணமகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மணமகள் மேடையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மணமகன் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதையடுத்து இருதரப்பினரும் வேதனையுடன் கோவிலில் இருந்து திரும்பிச் சென்றார்கள். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications