ஓட்டுக்கு துட்டு! திமுக பதுக்கிய பணம் யார் வீட்டில் இருக்குனு எனக்கு தெரியும்! நயினார் பரபரப்பு
வேலூர்: வரும் தேர்தலில் தொகுதிவாரியாக விநியோகம் செய்வதற்காக திமுகவினர் பதுக்கி வைத்திருக்கும் பணம் எங்கே உள்ளது என்பது எனக்கு தெரியும். அவை உரிய நேரத்தில் பறிமுதல் செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசுகையில், தேர்தல்களில் இறந்தவர்கள் எல்லாம் வாக்குப்பதிவு நாளன்று வந்து ஓட்டு போட்டுக் கொண்டே இருந்தார்கள். தற்போது எஸ்ஐஆர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதில் பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது.
இதே நிலை தமிழகத்திலும் தொடரும். கடந்த முறையே திமுக ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒரு சில கூட்டணியினர் தவறு செய்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது.
போன தேர்தலிலேயே 110 இடங்களில் பாஜகவும் அதிமுகவும் வென்றிருக்க வேண்டும். இதுதான் உண்மை. அதே நிலைமை தற்போது திரும்ப வரப்போகிறது. நான் ஏற்கெனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என பேசினேன்.
தற்போது வேலூரில் ஜலகண்டேஸ்வரர், மகாலட்சுமி தாயார் அருள்பாலிக்கும் இதே பூமியில் நான் உறுதியாக சொல்கிறேன். வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் அதிமுக பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியோர் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தே தீரும்.
ஓட்டுக்கு ரூ 2 ஆயிரம் , ரூ 3 ஆயிரம் தருவோம் என சொல்கிறார்கள். ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் 20 கோடி ரூபாய் திமுகவினர் பதுக்கி வைத்திருக்கிறார்கள். யார் யார் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
தகுந்த நேரம் வரும் போது அனைத்து பணமும் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் விளக்கேற்றுவது குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பு வழங்கினார்.
அவர் என்ன சொல்லியிருக்கிறார், தீபத் தூணில் 10 பேர் போய் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தார். அன்றைய தினம் 10 பேர் போய் தீபம் ஏற்றியிருந்தால் ஒன்றும் பிரச்சினையிருந்திருக்காது.
திருப்பரங்குன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பை ஏற்று தீபம் ஏற்ற யாரும் எதிர்க்கவில்லை. இதை எதிர்த்த ஒரே நபர் முதல்வர் ஸ்டாலின். இதுதான் வாக்கு வங்கி அரசியல். முதலிலே அது தீபத்தூண் இல்லை என்றார்கள். ஆனால் கனிமொழி என்ன சொன்னார், அது எல்லைக் கல் என்றார்.
எல்லை கல் என்றால் நாலாபுறமும் இருந்திருக்கும். ஆனால் ஒரே ஒரு கல் இருப்பதால் அது தீபத்தூண். அதன் பிறகு , இது சமணர்கள் வெளிச்சத்திற்காக தீபம் ஏற்றி வைத்த கல் என்கிறார்கள். ஆனால் சமணர்கள் எப்போதுமே தீபம் ஏற்றி வைத்தது கிடையாது. இதையெல்லாம் சொல்வது திமுக குடும்பத்தினர் மட்டுமே என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications