பூரா ரவுடி பசங்களும் பாஜகவில்! இதைச் செய்தால் தான் நமக்கு மரியாதை! பாடம் நடத்திய துரைமுருகன்!
வேலூர்: பூரா ரவுடி பசங்களும் பாஜகவில் தான் இருப்பதாகவும் ஊரில் தகராறு செய்பவர்களை எல்லாம் பாஜக பொறுக்கி எடுத்து சேர்த்துக் கொள்வதாகவும் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளை வென்றால் தான் நம்மை பார்த்து அதிகாரிகளும் பயப்படுவார்கள், மத்திய அரசும் பயப்படும் என நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
பணத் திமிங்கலத்தை எதிர்த்து நாம் போராட வேண்டியது இருக்கும் என்றும் எதற்கும் திமுகவினர் தயாராக இருந்துகொள்ள வேண்டும் எனவும் பாடம் நடத்தியிருக்கிறார் துரைமுருகன்.

துரைமுருகன் பேச்சு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார் படுத்தும் வகையில் பேசினார். பணபலத்தாலும், அதிகாரப் பலத்தாலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், ஊருக்குள் தகராறு செய்யக்கூடிய நபர்களை எல்லாம் பாஜக பொறுக்கி எடுத்து சேர்த்து வருவதாக விமர்சித்தார்.

ரவுடிகள்
பூரா ரவுடி பசங்களும் பாஜகவில் தான் இருக்கிறார்கள் என சாடிய துரைமுருகன், எது எப்படி வந்தாலும் சரி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுகவினர் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாஜக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பூத் கமிட்டியை ஜாக்கிரதையாக கவனமுடன் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், 40க்கு 40 தொகுதிகளையும் திமுக வெல்ல வேண்டும் என உறுதி காட்டினார்.

40க்கு 40 தொகுதிகள்
40க்கு 40 தொகுதிகளை வென்றால் தான் நம்மை பார்த்து அதிகாரிகளும் பயப்படுவார்கள், மத்திய அரசும் பயப்படும் என நிர்வாகிகளிடம் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். பணத் திமிங்கலத்தை எதிர்த்து நாம் போராட வேண்டியது இருக்கும் என்று கூறிய துரைமுருகன், எதையும் சந்திக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

துரைமுருகன் ஒப்புதல்
இதனிடையே தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை துரைமுருகனே ஒப்புக் கொண்டது போல் அவரது பேச்சு அமைந்திருப்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அதிமுகவை பற்றி பேசுவார் என்று பார்த்தால் அந்தக் கட்சியை காட்டிலும் பாஜகவை பற்றித் தான் அவர் அதிகம் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications