எத்தனை வருஷ ஏக்கம்? விடுதலையாகியும் தொட்டு பேச கூட முடியலையே!கணவர் சென்ற வேனின் பின்னால் ஓடிய நளினி

Subscribe to Oneindia Tamil

வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் விடுதலை காற்றை சுவாசித்தும், கணவனுடன் பேசக்கூட முடியாமல் நளினி முருகன் அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறை வாகனத்தின் பின்னாலேயே ஓடிய காட்சிகள் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் இதுகுறித்த முடிவெடுக்க தாமதம் செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிரடியால் விடுதலைக் காற்றை சுவாசித்தார் பேரறிவாளன்.

பேரறிவாளன் விடுதலை சிறையில் உள்ள மற்ற ஆறு பேரது விடுதலைக்கான அச்சாரமாக இருக்கும் என பலரும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அந்த விடுதலையை கொண்டாடின.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

6 பேர் விடுதலை

6 பேர் விடுதலை

தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் சனிக்கிழமை மாலை முடிந்து அவர்களும் விடுதலை ஆகினர். உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்காததால் நளினி விடுதலையாவதற்கு தாமதமாகும் என எதிர்பார்த்த நிலையில் தாயாரின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள படும் கேட்டு தமிழக அரசிடம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார். நளினி கடந்த டிசம்பர் மாதம் நிபந்தனை பரோலில் வெளிவந்த நிலையில் காட்பாடி அருகே அவரது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

நளினி விடுதலை

நளினி விடுதலை

தொடர்ந்து பத்து மாதமாக நளினி பரோலில் இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் இன்று சிறைச்சாலைக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பரோலில் இருந்த நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு விடுதலை நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் . அப்போது சாந்தன், முருகன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

வெளியே வந்த முருகன்

வெளியே வந்த முருகன்

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நளினியும் முருகனும் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்கள் மீண்டும் சந்திக்க முடியாமல் போனது. காரணம் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நளினி, பேரறிவாளனை போல் வீடுகளில் தங்க முடியாது. அவர்களை திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர காற்றை சுவாசித்தாலும் முருகனும் நளினியும் சந்திக்க முடியாமல் போனது.

பின்னால் ஓடிய நளினி

பின்னால் ஓடிய நளினி

முருகனை பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்ற போது நளினி காவல் வாகனத்தில் ஜன்னலை பிடித்துக் கொண்டே கணவரை பார்த்து கண்கலங்கிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. சாந்தன் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாக கூறியுள்ள நிலையில், இலங்கை தமிழர்களான முருகன் உள்ளிட்டோர் நிலை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+