குடும்ப அட்டைதாரர்களே.. 'நாளை ஒரே நிமிடத்தில் எல்லாம்'.. வெளியான முக்கிய அறிவிப்பு
வேலூர்: பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளதாகவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை உடனுக்குடன் செய்யலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில், " பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.

இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.
வேலூர் தாலுகாவில் சதுப்பேரி, காட்பாடி தாலுகாவில் தீயார்குப்பம், அணைக்கட்டு தாலுகாவில் முத்துகுமரன்மலை, குடியாத்தம் தாலுகாவில் ஏரிபட்டரை, கே.வி.குப்பம் தாலுகாவில் திருமணி, பேரணாம்பட்டு தாலுகாவில் கார்கூர் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்க்க ஆவணம்: உங்கள் ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டின் நகல் ஆகியவை வேண்டும். வேறு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. குழந்தையின் ஆதார் இருந்தால் அதையும் கொடுக்கலாம். அதை வைத்து உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் நாளை உடனே சேர்க்கலாம்.
குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ஆவணம்: இதேபோல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை எளிதாக விண்ணப்பிக்க முடியும். எல்லா அதிகாரிகளும் முகாம்களில் இருப்பார்கள் என்பதால் உங்கள் விண்ணப்பம் உடனே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருமணம் ஆன பின்னர் அவரவர் வீட்டின் ரேஷன் கார்டில் பெயரை நீக்கியிருக்க வேண்டும். நீக்கியதற்கான ஆவணம், திருமணம் நடந்ததற்கான ஆவணம், இருவரின் ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ் போன்றவை வேண்டும். இவை இருந்தால் நாளை உடனடியாக புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். குடும்ப அட்டையில் பெயரை நீக்க வேண்டும் என்றால், யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அவர்கள், ஆதார் கார்டு நகலுடன் சென்றால் உடனே நீக்கி கொள்ள முடியும். இதேபோல் செல்போன் எண் பதிவு செய்தல். குடும்ப தலைவரின் படத்தை மாற்ற வேண்டும் என்றாலும் உடனே மாற்றித்தருவார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications