வேலூர் சுடுகாட்டில் இப்படியுமா நடக்குது.. இளம் பெண் உடல் எங்கே.. பார்த்ததுமே ஆடிப்போன உறவினர்கள்
வேலூர்: வேலூர் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு தகன மையம் அமைந்துள்ளது. இங்கு 37 வயதுடைய பெண் உடல் நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது பெண்ணின் உடலை ஊழியர்கள் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தகன மையத்துக்கு உறவினர்கள் பூட்டு போட்டனர். அங்கு கேஸ் இல்லை என்று கூறிய ஊழியர்கள், அடுத்த சொன்ன பதிலை கேட்டு உறவினர்கள் ஆடிப் போனார்கள்,
வேலூர் அம்மாணங்குட்டை பகுதியில் அமைந்துள்ள எரிவாயு தகன மையத்திற்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி அஞ்சலி நடக்கும். இங்கு 37 வயதுடைய இறந்த பெண் உடலை உறவினர்கள் தகனம் செய்ய நேற்று கொண்டு வந்துள்ளனர். அங்கு இளம் பெண் உடலுக்கு உறவினர்கள் சடங்குகள் செய்து, பின்னர் தகன மேடையில் எரிப்பதற்கு உள்ளே ஊழியர்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து வெளியே சென்ற உறவினர்கள் அங்கு காத்திருந்தார்களாம். ஆனால் தகனமேடை எரிவாயு புகை போக்கியில் இருந்து புகை ஏதும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் பணியாற்றிய ஊழியர்களிடம் என்னாச்சு என்று கேட்டனர். அதற்கு அவர்கள் நீங்கள் செல்லுங்கள் என்று மட்டும் கூறி உடனே வெளியே அனுப்பி விட்டார்களாம். மேலும் அஸ்தியை பிறகு வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினார்களாம். ஆனால் பெண்ணின் உறவினர்கள் காத்திருந்து அஸ்தியை பெற்றுச் செல்வதாக தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆகியும் புகை வரவில்லை. இதனிடையே நாளை வந்து அஸ்தியை பெற்றுச்செல்லுங்கள் என்று ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சிறிதுநேரம் கழித்து ஒரு மூதாட்டியின் உடலை மற்றொரு தரப்பினர் தகனம் செய்ய அங்கு கொண்டு வந்தார்களாம். அப்போது எரிவாயு தகன மேடையை, மூதாட்டியின் உடலை உள்ளே கொண்டு சென்றார்களாம். அவர்களுடன் பெண்ணின் உறவினர்களும் சென்றனர். அப்போது எரிப்பதற்காக உள்ளே அனுப்பப்பட்ட பெண்ணின் உடல் ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதைப்பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஆடிப்போனார்கள்.
ஏன் உடலை தனியாக வைத்துள்ளீர்கள் என்று அவர்கள் ஊழியர்களிடம் கேட்டனர். அப்போது எரிப்பதற்கு கியாஸ் இல்லை என்றும், மண்எண்ணெய் அல்லது பெட்ரோல், விறகு பயன்படுத்திதான் எரிக்கப்படும் என்றனர். இதனால் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் தகனமேடையை பூட்டினார்கள்.
தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உறவினர்கள் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் முருகன் அங்கு வந்தார். அவரிடம் போலீசார் சாவியை ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் பெண்ணின் உடலை அருகே மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிலர் கூறும் போது, அம்மாணங்குட்டை பகுதியில் அமைந்துள்ள எரிவாயு தகன மையத்திற்கு வேலூர் நகரின் பல இடங்களில் இருந்து இறந்தவர்களின் உடல் கொண்டு வந்து எரிக்கப்படுகிறது. அவர்களுக்கு அஸ்தியும் வழங்கப்படுகிறது.
ஏன் பெண்ணின் உடலை எரிக்காமல் வெளியே எடுத்து வைத்தனர். இரு உடல்களையும் ஒன்றாக எரிப்பதற்காக முடிவு செய்தனரா? என்று சந்தேகங்கள் எழுகிறது என்று குற்றம்சாட்டினார்கள். பல மாதங்களாக பெட்ரோல், மண்எண்ணெய் பயன்படுத்தி தான் உடல்கள் எரிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் அஸ்தியை சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு முறையாக வழங்குகிறார்களா? அல்லது மாற்றி அஸ்தி வழங்கப்படுகிறதா? என்று கேள்வியும் எழுப்பி உள்ளார்கள்.
-
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications