ரூ.8.5 லட்சம், 15 பவுன் நகையை கொள்ளையடித்த எஸ்ஐ, காவலர்கள் சஸ்பெண்ட்.. மிரண்டுபோன வேலூர் மக்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சாராயம் ரெய்டுக்கு சென்ற போலீசார் இரண்டு வீடுகளில் நுழைந்து உள்ளே பீரோக்களை உடைத்து 8.50 லட்சம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகளை திருடியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் எஸ்ஐ, மற்றும் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று உள்ளனர்.

பீரோ உடைப்பு

பீரோ உடைப்பு

அங்கு சாராயம் இருப்பதாக கூறப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற சென்றபோது அங்கு அவர்கள் இல்லை.அவர்கள் வீட்டில் உள்ளே நுழைந்த காவல்துறையினர் பீரோவை உடைத்து அதிலிருந்த 8.50 லட்சம் ரொக்க பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

காவல்நிலையம் முற்றுகை

காவல்நிலையம் முற்றுகை

தகவலறிந்து அவர்களை மடக்கிய அப்பகுதி கிராம மக்கள் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் பணம் வைத்திருந்த பையிலிருந்து பணத்தை அவர்கள் மூலமாகவே எடுத்துக் கொடுக்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் காவல்துறையினருடன் அரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

விசாரணை

விசாரணை

கிராம மக்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம், வீடு புகுந்து பணத்தை எடுத்து வந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர் காவல்துறையினர் மற்றும் மலை கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலர்கள் சஸ்பெண்ட்

காலர்கள் சஸ்பெண்ட்

மலைப்பகுதியில் சாராய ரெய்டுக்கு வரும் காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற பணங்களை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது தொடர்கதையாக உள்ளதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பீரோக்களை உடைத்து 8.50 லட்சம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகளை திருடிய புகாரில் எஸ்ஐ, மற்றும் இரண்டு காவல்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+