டாஸ்மாக்கில் ஆன்லைனில் ஆர்டர் செய்தும்.. காசும் போச்சு, பாட்டிலும் கிடைக்கல! அரக்கோணம் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ₹10 கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க 'Tasmac2e.in' என்ற ஆன்லைன் முன்பதிவு வசதியை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அரக்கோணம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ஆன்லைனில் பணம் செலுத்தி முன்பதிவு செய்த மதுப்பிரியர்களுக்குச் சரக்கு வழங்க ஊழியர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டார்களாம்.. இந்த ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில், ஆன்லைன் விற்பனை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால், ஆன்லைன் மதுவிற்பனைக்கு மதுப்பிரியர்கள் வரவேற்பு காட்டவில்லையோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த கூடுதல் கட்டண வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மது பிரியர்கள் சிரமமின்றி சரக்குகளை பெறும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு புதிய ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Tasmac2e in Tasmac Online Order Arakkonam Tasmac Issue Tasmac2e in

இதற்காக Tasmac2e.in என்ற ஸ்பெஷல் வெப்சைட் தொடங்கப்பட்டது.. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபானங்களை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அதற்கான கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்திவிடலாம்.

டாஸ்மாக் Tasmac2e.in

பிறகு அதற்காக உருவாக்கப்படும் க்யூ.ஆர். (QR) குறியீட்டை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளில் காண்பித்து, தாங்கள் முன்பதிவு செய்த மதுவகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் மது இருப்பு விவரங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக தெரிந்துகொள்ளவும், குறைந்தபட்ச சில்லறை விலையை மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கட்டுப்படுத்தவும் இந்த முறை நிச்சயம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆன்லைனில் மதுபானம் ஆர்டர்

இந்த ஆன்லைன் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் 21 வயது நிறைவடைந்ததை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளையோ அல்லது கடை எண் மற்றும் மாவட்டத்தை குறிப்பிட்டோ தேடலாம். இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், சென்னையில் இருக்கும் ஒருவர் திருநெல்வேலியில் உள்ள கடையில் கூட முன்பதிவு செய்துகொள்ளும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆன்லைன் முன்பதிவு திட்டம்

இந்த ஆன்லைன் முன்பதிவு திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதேசமயம், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தாமல், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்துவது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. தமிழக அரசின் இந்த நகர்வுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் வெடித்து வருகின்றன.

ராணிப்பேட்டையில் காசும் போச்ச

இந்த சூழலில்தான், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கும்பினிபேட்டையில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் அதிருப்தி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள டாஸ்மாக் கடையில் சிலர் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை முன்பதிவு செய்திருக்கிறார்கள். .

பிறகு, முன்பதிவு செய்ததற்கான க்யூ.ஆர். குறியீட்டுடன் சம்பந்தப்பட்ட கும்பினிபேட்டை டாஸ்மாக் கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் அந்த குறியீட்டைக் காண்பித்து மதுபாட்டில்களையும் கேட்டிருக்கிறார்கள்.. இதைப்பார்த்து ஷாக்கான கடை ஊழியர்களோ, "எங்கள் கடையில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெற்றுக்கொள்ளும் வசதி இன்னும் நடைமுறைக்கே வரவில்லை" என்று அசால்ட்டாக சொன்னார்களாம்.

பாட்டிலும் கிடைக்கல

அதுமட்டுமல்ல, ஆன்லைனில் ஏற்கனவே பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தாலும், தங்களால் மதுபாட்டில்களை வழங்க முடியாது என்றும் ஊழியர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்குமிடையே அந்த கடையிலேயே வாக்குவாதம் வெடித்துள்ளது.

போதாக்குறைக்கு, ஆன்லைனில் செலுத்திய பணமும் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக திரும்ப வரவில்லை. இதனால் ஆன்லைனில் பணத்தையும் இழந்து, கடைக்கு நேரில் வந்தும் சரக்கைப் பெற முடியாமல் போனதால் முன்பதிவு செய்தவர்கள் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்தனர்.

அரசு மதுபானக் கடைகள்

இதனிடையே, ஆன்லைன் வசதிதான் இல்லையே என்று நேரில் நேரடியாக பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்க முயன்றபோதும், வழக்கம்போல் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று ஊழியர்கள் கறாராக தெரிவித்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த ஆன்லைன் முன்பதிவு வசதி கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியிருக்கும்போது, சம்பந்தப்பட்ட கடைகளில் அந்த வசதி இன்னமும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராதது ஏன் என்று மது பிரியர்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்...!!

பணத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்து கட்டிய பின்னரும், நேரில் கடைக்குச் செல்லும்போது அப்படி ஒரு வசதியே இல்லை எனக் கூறி மதுபானம் தர மறுப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், கடுமையான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு இந்த குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விற்பனை வீதம் எவ்வளவு

கடந்த 7-ஆம் தேதி இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் மற்ற மதுக்கடைகளிலும் வாக்குவாதங்களும் எழுந்து வருகின்றன.

இந்த த்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் ரூ.11.62 லட்சத்திற்கும், இரண்டாவது நாளில் 3,000 முன்பதிவுகள் வாயிலாக ரூ.9 லட்சத்திற்கு மட்டுமே மதுபாட்டில்கள் ஆன்லைனில் விற்பனையாகியுள்ளன... அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளின் மொத்த மதுவிற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்த நிலையில், ஆன்லைன் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பதிவாகி மதுப்பிரியர்களிடையே போதிய வரவேற்பைப் பெறாமல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+