வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

16 வயசு தான்.. கஞ்சா போதை..! நடுரோட்டில் ரகளை செய்த ’டவுசர் பாண்டி’..! திடுக்கிட்ட திருப்பத்தூர்!

Google Oneindia Tamil News

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை நேரத்தில் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சாலையில் வருவோர் போவோரை எல்லாம் நிறுத்தி தகராறு செய்த 16 வயது மாணவன் ஒருவனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் அச்சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளை ஈடுபட்டு வந்தார்.

இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர் மேலும் தொடர்ந்து ரகளை ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து அப்பகுதி மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனை சமூக வலைதளங்களிலும் பரவச் செய்துள்ளனர். இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் என்பதும் அதே பகுதியில் படித்து வந்த அவர் தற்போது பள்ளிக்கு செல்லாமல் சிலருடன் சேர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தகராறு

தகராறு

சம்பவம் நடந்த அன்று கஞ்சா பயன்படுத்துவது குறித்து தனது வீட்டில் இருப்பவர்கள் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் வீட்டில் இருப்பவர்களை அடித்து விட்டு தலைக்கேறிய போதையில் என்ன செய்வது என்றே தெரியாமல் காவல் நிலையம் முன்பு வந்ததும் அங்கு சாலையில் வருவோர் போவோர்களை எல்லாம் நிறுத்தி தர குறைவாக பேசியதோடு தாக்க முற்பட்டதும் தெரிய வந்தது.

 பொதுமக்கள் புகார்

பொதுமக்கள் புகார்

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் அந்த சிறுவனை கட்டிப்போட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் . திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும் இதனால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள் காவல்துறையினர் உடனடியாக கஞ்சா புழக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோர்கள் கவனம்

பெற்றோர்கள் கவனம்


தற்போதைய நிலையில் மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கரூரில் ஒயின் போதையில் பள்ளி மாணவிகள் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்ததும் காவல்துறையினர் அவர்களை பெற்றவுடன் ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்கள் யார் யாருடன் பழகுகிறார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து பெற்றோரும் ஓரளவு கவனம் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.

English summary
A 16-year-old student in Tirupathur district stopped and argued with motorists on the road under the influence of ganja in front of the police station. ; திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சாலையில் வாகன ஓட்டிகளை நிறுத்தி தகராறு செய்த 16 வயது மாணவன்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X