குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் 3 ஆவது முறையாக நில அதிர்வு.. மக்கள் அச்சம்.. வீடுகள் சேதம்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் சில வீடுகள் சேதமடைந்தன
Recommended Video
குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டில் மீண்டும் ஒரு நில அதிர்வு இன்று காலை ஏற்பட்டது. இரு முறை விட்டுவிட்டு ஏற்பட்ட நில அதிர்வு சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அதிர்வால் சில வீடுகள் லேசான சேதமடைந்தன.
இன்று ஏற்பட்டது 3ஆவது முறையாகும். ஏற்கெனவே நவம்பர் 28, டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி ஏற்பட்ட நில அதிர்வு 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது.

பேரணாம்பட்டில் நில அதிர்வு
இந்த நாளில் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த சப்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சூப்பர்சானிக் விமானங்கள் பறந்தால் அதன் மூலம் அதிர்வுகள் ஏற்பட்டு அது போல் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதியும் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

நில அதிர்வு
இதனால் பல வீடுகள் விரிசல் அடைந்தன. அது போல் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டிடி மோட்டூர், கமலாபுரம் ஆகிய கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து குடியாத்தத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வமாக 3ஆவது முறை என சொல்லப்பட்டாலும் மக்கள் இன்று ஏற்பட்டதை 4ஆவது முறை என்கிறார்கள்.

வீடுகள் சேதம்
இந்த சாதாரண நில அதிர்வுகளால் வீடுகள் சேதமடைந்துள்ளது. எனவே நில அதிர்வுக்கான காரணம் குறித்து புவியியல் நிபுணர்களை வைத்து கண்டறியுமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்னர் காரணத்தை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நில அதிர்வு
அது போல் கடந்த 22 ஆம் தேதி பெங்களூருவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது. பெங்களூருவின் வடக்கு திசையில் 66 கி.மீ. தொலைவிலும் 23 கி.மீ. ஆழத்திலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications