Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் அரசு ஊழியருக்கு வந்த ஆசை.. ரஜினிகாந்த் அவ்ளோ சொன்னாரே? இப்ப கிரெடிட் கார்டு வில்லங்கம் வேற

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பெருகிவரும் ஆன்லைன் மோசடிகளுக்கு யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவ, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், இது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீஸ், ஏற்கனவே முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை பொதுமக்களுக்காக விடுத்திருந்த நிலையில், மீண்டும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் வேலூரில் என்ன நடந்தது தெரியுமா?

அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.. அதிலும், சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவேதான் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சைபர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Vellore Government Employee credit card

அந்தவகையில் வேலூர் மாவட்டத்திலும் எஸ்பி அலுவலகத்தில் சைபர்கிரைம் பிரிவுபோலீசார் எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பார்ட் டைம் வேலை

2 மாதங்களுக்கு முன்பு வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு மோசடி சம்பவம் நடந்தது.. நகராட்சி அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலை பார்க்கும் 35 வயது பெண், ஒருநாள் தன்னுடைய செல்போனில், "பார்ட் டைம் வேலையில் சேர்ந்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம்" என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அந்த வேலையில் பார்ட் டைம் வேலைக்கு சேரவிரும்பி தொடர்பு கொண்டதற்கு, டெலிகிராம் குரூப் ஒன்றில், அவரை இணைத்திருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதலின்பேரில் மெல்ல மெல்ல ரூ.9 லட்சத்து 86 ஆயிரத்து 665 முதலீடு செய்து, அதில் சிறிய தொகையையும் கமிஷனாக பெற்று விட்டார் அந்த பெண்.

அரசு ஊழியர் பெண் மகிழ்ச்சி

உடனடி கமிஷனை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், அந்த மொபைல் அப்ளிகேஷனில் பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பணத்தை முதலீடு செய்தால் தான், பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அப்போதுதான், அப்பெண் அரசு ஊழியர் சந்தேகமடைந்து விசாரித்தபோது, தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று தெரியவந்தது. உடனே போலீசிலும் புகார் தந்தார்,.

இந்த அரசு ஊழியர் மட்டுமல்லாமல், கணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றிய வரும் பேராசிரியர் ஒருவரும் இப்படி ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 591 முதலீடு செய்து ஏமாந்துவிட்டார். இறுதியில் 2 பேருமே வேலூர் சைபர் கிரைம் போலீசுக்கு ஓடினார்கள்.. தங்களிடம் ரூ.23.54 லட்சம் மோசடி நடந்தது குறித்து புகார் தந்தனர்.

ரஜினிகாந்த் அட்வைஸ்

"பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு விளம்பரங்கள், பகுதி நேர வேலை போன்ற பல்வேறு விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தார்.

எனினும் மீண்டும் ஒரு மோசடி சம்பவம் இதே வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. அணைக்கட்டு அருகே உள்ள பொய்கை மோட்டூரைச்சேர்ந்த பெண் ஒருவர், போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.. அதில், சிபிஐ போலீசார் பேசுவதாக சொன்னார்கள். அவர்கள் சென்னையில் பயிலும் எங்களது மகள் பணமோசடி செய்துவிட்டதாகவும், மகளை கைது செய்யாமல் இருக்க உடனே ரூ.45ஆயிரம் அனுப்புமாறும் சொன்னார்கள்.

மணி லாண்டரிங்

உடனே நாங்களும் ஆன்லைனில் ரூ.45ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தோம். பிறகுதான் அது மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது. எனவே பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அதேபோல் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த நபர் ஒருவரும் மற்றொரு புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங் சென்றபோது கிரெடிட் கார்டு பயன்படுத்தினேன். கிரெடிட் கார்டு எண்களை வைத்து ரூ.90 ஆயிரம் வரையில் பணத்தை எடுத்துவிட்டனர்.. எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

கிரெடிட் கார்டு ஆப்ஷன்

பெருகிவரும் இந்த குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் சொல்லும்போது, 'போலீசார் பேசுகிறோம், உங்களது உறவினரையோ, மகன், மகளையோ கைது செய்கிறோம் உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று சொன்னால், அதை உடனே புறக்கணியுங்கள்..

பள்ளி, கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்று கூறி மோசடி இதுபோன்று செல்போனில் தொடர்புகொண்டு பேசும் நபர்களையும் புறக்கணியுங்கள், அவர்களிடம் பேசி பணத்தை இழக்காதீர்கள்.

அதேசமயம் வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு ஓடிபி எண் வராது, எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், உடனே கிரெடிட் கார்டு ஆப்ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும். மாறாக ஆன் செய்து வைத்திருப்பவர்களது பணம் எடுக்கப்படுகிறது. எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+