ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கொள்ளை: மூட்டையாக கட்டி பதுக்கிய கொள்ளையன் - ஐந்தே நாட்களில் பிடித்தது எப்படி
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சுடுகாட்டில் புதைத்து வைத்த கொள்ளையனை 5 நாட்களில் பிடித்து 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மூட்டையாக கட்டி கொள்ளையன் கொண்டு சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நூற்றுக்கணக்கான காவலர்கள் தீவிரமாக புலனாய்வு செய்து ஐந்தே நாட்களில் கொள்ளையனை கண்டுபிடித்து 15 கிலோ தங்கநகைகளை பத்திரமாக மீட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்
கடந்த 15ம் தேதி எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது.
நகைக்கொள்ளை போனது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை கும்பலைப் பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாக நகைகடையை முழுவதுமாக சோதனை செய்த தனிபடை போலீசார், நகைகடை மற்றும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

சிசிடிபி கேமரா
கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து ஃபால்ஸ் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் முகமூடி அணிந்து கொண்டு சிசிடிவி கேமிராவில் ஸ்பிரே அடிப்பது பதிவானது. மற்றொரு சிசிடிவி காட்சியில் கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு இறங்குவது பதிவாகியிருந்தது. ஒல்லியான தேகம் சிங்க முகமூடி அணிந்த உருவம் யாராக இருக்கும் என்று தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.

மோப்ப நாய்
மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பேருந்து நிலையதின் சாலையில் நின்றது.

புலன் விசாரணை
விடுதிகள் மட்டுமல்லாது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடுகள், மாவட்ட எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர். நகைக்கடை அமைந்துள்ள தோட்டப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். நகைக்கடையில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

உள்ளூர்வாசியா?
வட மாநில கொள்ளையர்களா என்ற கோணத்தில் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். நகைக்கடையில் வெளியில் உள்ள சிசிடிவி காட்சியில் சம்பவ நேரத்தில் கடையின் சற்று தொலைவில் ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது பதிவாகியிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் நடத்தியதில் அந்த ஆட்டோ உள்ளூரைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்தனர்.

செல்போன் சிக்னல்
அப்பகுதி முழுவதும் சாலையில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் செல்போன் டவரில் எந்தெந்த செல்போன் சிக்னலில் இருந்தது என ஆய்வு செய்து சுமார் ஒன்றரை மணிநேரம் மட்டுமே சிக்னல் ஓர் இடத்திலேயே இருந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர்.

நகைகள் புதைப்பு
அது பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் என்பவரது என்று தெரியவந்தது சிசிடிவியில் பதிவான கொள்ளையன் தோற்றம், கைரேகைகள் டீக்காராமனுடன் ஒத்துப்போனது. அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை சுடுகாட்டில் மூன்று இடங்களில் புதைத்து வைத்தாக கூறினார். இதனையடுத்து உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் இருந்து நகைகளை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர்.

கொள்ளையடித்தது எப்படி
டீக்கா ராமனுக்கு சிங்க முகமூடி அணிவிக்கப்பட்டு, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது எப்படி என டீக்காராமன் போலீசாருக்கு நடித்துக் காட்டியுள்ளார். சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது போல், தரைத்தள சுவரை துளையிட்டு உள்ளே வந்தது எப்படி என்றும் சிசிடிவி காட்சிகளில் ஸ்ப்ரே அடித்தபிறகு என்ன நடந்தது என்பதையும் நடித்துக் காட்டியுள்ளார். சுவரை எவ்வாறு துளையிட்டார்? ஃபால்ஸ் சீலிங் உடைக்கப்பட்டது எப்படி? நகைகளை எடுத்துக்கொண்டு எவ்வாறு வெளியேறினார் என்பதையும் நடித்துக்காட்டியுள்ளார் டீக்காராமன்.

5 நாட்களில் நகைகள் மீட்பு
இவ்வளவு நகைகளை கொள்ளையடித்தவன் ஒரு தங்க ருத்திராட்சத்தை மட்டும் கழுத்தில் அணிந்திருந்தான்.கொள்ளை போன நகைகள் நூறு சதவிகிதம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக கொள்ளையன் 10 நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் கடந்த 5 நாட்களாக தீவிரமாக விசாரணை நடத்தி 5 நாட்களில் நகை கொள்ளையை கண்டுபிடித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications