விர்ருன்னு வேலூர் மார்க்கெட்டில் ஏறிய தேங்காய்.. சபரிமலை சீசன் வேற.. எப்ப தேங்காய்கள் விலை குறையும்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சபரிமலைக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் கோயிலுக்கு மாலை அணிவது என பக்தர்கள் விரதங்களில் ஈடுபட்டு வரும்நிலையில், தேங்காய்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.. இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்? எப்போது தேங்காய் விலை குறையும்? இதுகுறித்து தென்னை வியாபாரிகள் சொல்வதென்ன?

தமிழகத்தில் கடந்த மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டன.. அதேபோல குளிர்காலம் என்பதால், ஈரப்பதம் காரணமாகவும், வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலைகளிலும் பெருத்த உயர்வு காணப்பட்டு வருகிறது.

sabarimala

ஐயப்ப சீசன்: இப்போது ஐயப்ப சீசனும் நடந்து வருகிறது.. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் விரதம், முருகனுக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது என விரத காலங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் அசைவ உணவை தவிர்த்துவிட்டு பெரும்பாலானோர் காய்கறிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

பக்தர்கள் மாலை போடும் சீசன் என்பதால் காய்கறிகளின் விலைகளில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது.. அதிலும், கார்த்திகை, மார்கழி, தை இந்த 3 மாதங்களுமே சபரிமலை சீசன் என்பதால், தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள், நெய் தேங்காய், இருமுடி கட்டுதலுக்கு தேங்காய் அதிகளவில் வாங்குவார்கள்.

தேங்காய் சீசன்: இந்நிலையில், நாடு முழுவதிலுமிருந்து சபரிமலைக்கு அதிகளவு பக்தர்கள் செல்வதால், தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், மார்க்கெட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது. வழக்கமான தேங்காய் வரத்தில், 20 - 30 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும், தேங்காய் சீசன் இல்லாத காலம் என்பதால், வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால், விலையும் உயர்ந்துள்ளதாக தேங்காய் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

கடந்த மாதம் பச்சை தேங்காய் ஒரு டன், 47 ஆயிரம் ரூபாய்; கருப்பு தேங்காய், 49 ஆயிரம் ரூபாய், ஸ்பெஷல் கொப்பரை கிலோ, 130 ரூபாய்; சாதாரண கொப்பரை கிலோ, 120 ரூபாய், தேங்காய் பவுடர் கிலோ, 230 ரூபாய்க்கு விற்றது.

பச்சை தேங்காய்: தற்போது, பச்சை தேங்காய் ஒரு டன், 53 ஆயிரம் ரூபாய், கருப்பு தேங்காய், 55 ஆயிரம், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 2,800 முதல், 3,000 ரூபாய்; சாதாரண கொப்பரை ஒரு கிலோ, 135; ஸ்பெஷல் கொப்பரை, 140 ரூபாய், தேங்காய் பவுடர், 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தேங்காய் டன்னுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை உயர்ந்திருக்கிறதாம்.. சமீபத்தில்தான் கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்துள்ளது. இனி புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்த விசேஷங்கள் வரப்போவதால் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, பிப்ரவரி மாதங்களிலும் தட்டுப்பாடு நீடிக்கும் என்பதால், தேங்காய் விலை குறைய வாய்ப்பு என்றும், தேங்காய் ஒரு டன்னுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள்.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.. எனினும், போதிய விலை கிடைக்காதது, விலை வீழ்ச்சி வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களாலும், தென்னை விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

தற்போது 3 வருடத்துக்கு பிறகு, கொப்பரை விலை, 140 ரூபாய் வரை உயர்ந்த நிலையில், சபரிமலை சீசனும் துவங்கிவிட்டதால் தேங்காய் தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒரு டன் தேங்காய்க்கு, 5,000 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறதாம்.

வேலூர் மார்க்கெட்: வேலூர் மார்க்கெட்டுக்கு, திருப்பத்தூர் மட்டுமின்றி, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து, ஒவ்வொரு 3 நாள் இடைவெளியில் 10 டன் தேங்காய்கள் லாரிகள் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

சபரிமலை மட்டுமல்லாமல், மேல்மருவத்தூர் கோயிலுக்கும் பெண்களும், ஆண்களும் சென்று வருவதால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வரத்தும் அதிகரித்துள்ளதுடன், தேங்காய் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

எப்போது விலை குறையும்: இப்போது வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து 13 முதல் 15 டன்னாக அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி தேங்காய் டன் ஒன்று ரூபாய் 60,000க்கு இறக்குமதியானது.

அந்தவகையில், டன்னுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.. இதனால் சில்லறையில் பொள்ளாச்சி பெரிய தேங்காய் ரூ.22 முதல் ரூ.42 வரை விற்கப்படுகிறது. உள்ளூர் சிறிய தேங்காய் ரூ.13 முதல் ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி பார்த்தாலும் பிப்ரவரி மாதம் வரை தேங்காய் விலை உயர்ந்தே காணப்படுமாம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+