வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சிறப்பு கல்விக்கடன் முகாம்.. 16ம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்குபெறும் சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்படுகிறது. இதில் வேலூர் மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று கல்விக்கடன் பெறலாம் என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசுகல்லூரிகள் தொடங்கிய பின்னர், மாணவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கல்விக் கடன்களை உடனடியாகப் பெற்றுத் தருவதற்காக, சிறப்பு கல்வி கடன் முகாம்களை அமைக்கிறது. மாணவர்கள் வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சிக்கல்களைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து, விரைந்து கடன் வழங்க விரும்புகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்துகிறது. பரவலாக எல்லா மாவட்டங்களிலும் நடக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் பட்டப்படிப்பு மாணவர்களும் முகாமிற்கு நேராக சென்று கல்விக்கடன் பெற முடியும். கல்விக்கடன் கிடைக்காமல் அவதிப்படும் மாணவ மாணவிகள் முகாமில் சென்றால் உடனே கடன் பெற முடியும். அரசு அதற்காக ஏற்பாடுகளை செய்கிறது. அந்த வகையில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வரும் செப்டம்பர் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் 10, 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியை தொடர முடியாமல் உள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்த்து கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தி வருகிறது.
அதன்படி 2-வது கட்டமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்குபெறும் சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்படுகிறது.
எனவே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் பட்டியல், பான்கார்டு, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கல்லூரி உறுதி சான்றிதழ் மற்றும் கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications