வாணியம்பாடி அரசு மருத்துவமனை டாக்டர் புதிய வீட்டில்.. கனவில் கூட நம்ப முடியாத நிலையில் குடும்பம்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் டாக்டர். சிவசுப்பிரமணியம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் புதிதாக வீடு மற்றும் கட்டிடம் கட்டி வந்தார். அந்த புதிய கட்டிடத்தில் அவர் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது. . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைக்கு பலர் சிறுக சிறுக சேமித்தும், பற்றாக்குறைக்கு கடன் வாங்கி தான் வீடு கட்டுகிறார்கள். அப்படி கட்டும் வீட்டிற்கு பல வருடம் வீட்டுக்கடனும் வாங்குகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களே ஒவ்வொரு ஊரிலும் கடன் இல்லாமல் வீடு கட்டுகிறார்கள். அதேபோல் அலுவலகங்கள் மற்றும் கடைகள் கட்டுகிறார்கள். இன்றைய சூழலில் பலர் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். அப்படி ஏற்படும் மனஅழுத்தம் என்பது அவர்கள் பார்க்கும் வேலையை பொறுத்து மாறுபடுகிறது.

இதில் போலீஸ், டாக்டர்கள் அதிக மனஅழுத்ததிற்கு ஆளாகிறார்கள். அதிகப்படியான வேலை நேரம், குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமை, விடுமுறை இல்லாதது, பிரச்சனைகளை மட்டுமே தினமும் பார்ப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தை இயல்பாக அதிகமாக்குகிறது. இதில் விடுபட முடியாமல், சில நேரங்களில் ஏமாற்றத்தில் தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் டாக்டர் ஒருவர் தவறான முடிவெடுத்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த 50 வயதாகும் டாக்டர். சிவசுப்பிரமணியம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை டாக்டராக வேலை செய்து வந்தார். தற்போது இவரது வீட்டின் அருகில் புதிதாக வீடு மற்றும் மருத்துவமனை கட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் டாக்டர் சிவசுப்பிரமணியம் தூக்கிட்டிருக்கிறாராம்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வாணிம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் சிவசுப்பிரமணியத்தின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்க்கையை முடித்துக் கொண்ட டாக்டர் சிவசுப்பிரமணியத்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications