ரூ. 500, 1000 நோட்டுகளைச் செலுத்த தனி கவுண்டர் தேவை.. திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற திருப்பதி கோவிலில் தனி கவுண்டர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 8ம் தேதி மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, திருப்பதி கோவிலில் காணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் காணிக்கை செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு செல்லாத ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்கு வசதியாக பயணிகளுக்கு தனியாக கவுண்டர் அமைக்க வேண்டும். பின்பு அவர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications