மதுபோதையில் இருந்த டிரைவர்... கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து 6 பேர் காயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: பெங்களூருவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சேலம் வழியாக திருச்சிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக இந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், அந்த வழியே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் பெண் ஒருவர் என மூன்று பேர் லாரியின் அடியில் சிக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், லாரியின் அடியில் சிக்கிய மூன்று பேரையும், லாரியில் இருந்து காய்கறிகள் சிதறியதால் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். லாரியின் டிரைவர் மது போதையில் இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications