பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி.. விழுப்புரத்தில் சோகம்! துடிதுடித்த பெற்றோர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில், எல் கே ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றரை வயது மாணவி லியா பிரியதர்சினி என்ற குழந்தை எல்கேஜி சி வகுப்பில் பயின்று வந்தார். இந்த வகுப்பறையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் தான் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை அருகேயே செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்கை சுற்றி வேலை அமைக்கப்பட்டு இருந்தது. செப்டிக் டேங்க் மேலே ஒரு இரும்பு தகரத்தினை கொண்டு மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி லியா பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.
அப்போது அந்த தொட்டியில் மூடப்பட்டிருந்த இரும்பு தகரம் உடைந்து சிறுமி உள்ளே விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற சிறுமிகள் ஆசிரியர்களிடம் தகவல் கூற உடனடியாக ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு வந்து குழந்தை லியா பிரியதர்ஷினியை மீட்டனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
முன்னதாக பள்ளிக்கும் மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் கழிவுநீர் தொட்டி இருக்கும் இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று பெற்றோர்கள் கூறி வருகிறார்கள்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு! காலண்டர் வெளியீடு! அதிகபட்சம் விடுமுறை எந்த மாதம்? கல்வித்துறை லிஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications