எண்ட் கார்ட் போட்டு எகத்தாளமா பண்றீங்க!எனக்கு எண்டே கிடையாது! வெட்டியும் தார் போட்ட அதிசய வாழை மரம்
விழுப்புரம் : பொதுவாக வாழை மரங்கள் உச்சியில் மட்டுமே வாழைத்தார் போடும் நிலையில் வெட்டப்பட்ட வாழை மரம் ஒன்று தார் போட்டுள்ளதை உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது நடந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வு விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.
வாழையடி வாழையாக என எல்லோரையும் வாழ்த்துவது தமிழர்களின் மரபு. எத்தனை முறை வெட்டினாலும் அதன் அருகருகே தொடர்ந்து வளர்ந்து வருவதால் குடும்பம் தழைக்க வாழை மரத்தின் பெயரை சொல்லி வாழ்த்துவார்கள்.
அந்த அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலில் வாழை மரம் நீக்க முடியாத இடம் பிடித்திருக்கிறது. வாழை மரத்தை பொருத்தவரை இலை, பூ, காய், பழம், நார், தண்டு என அனைத்து பகுதிகளுமே பயனுள்ளது தான், வாழை மரத்தில் தேவையில்லை என்று எதையுமே ஒதுக்கி விட முடியாது.
எடப்பாடிக்கு எதிராகக் கிளம்பிய 'வாழை’ முறைகேடு.. சேலத்தில் மட்டும் 500 கோடி?- அமைச்சர் பகீர் புகார்!

அதிசய வாழை
பொதுவாக வாழை மரத்தில் ஒரு தடவை மட்டுமே தார் போடும். சில நேரங்களில் மரத்தின் குறுக்கேயும் அல்லது வெட்டப்பட்ட பின்னரும் தார் போடுவது வழக்கம். இந்த நிலையில் விழுப்புரம் அருகே வெட்டப்பட்ட மரத்திலிருந்து வாழைமரம் தார் போட்டுள்ள அதிசய நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

வெட்டியும் தார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பல்லாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. தனது நிலத்தில் விளைந்திருந்த வாழை மரத்தை அவர் வெட்டி நிலையில் மரத்தின் அடிப்பகுதியில் இருந்தே வாழைமரம் பூ பூத்ததோடு தாரும் போட்டு இருக்கிறது.

மக்கள் ஆச்சர்யம்
இந்த தகவல் தற்போது அப்பகுதியில் பரவிய நிலையில் தினமும் ஏராளமான மக்கள் வந்து அந்த அதிசய மரத்தை பார்த்து செல்கின்றனர். வாழை மரங்கள் பொதுவாக ஒரு முறை மட்டுமே குலை தள்ளும் இயல்புடையவை பாதியாக வெட்டிய பின், மீண்டும் வாழை மரத்திலிருந்து குலை தள்ளிய அதிசயத்தை அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

உண்மையா?
இதுகுறித்து தோட்டக்கலைத்துறைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஒரு வாழை மரம் ஒரு முறை மட்டுமே குலை தள்ளும் இயல்புடையது. ஒரே மரததில் இரண்டு முறை குலை தள்ள வாய்ப்பில்லை. வாழை மரம் வளர்ந்த இடம் சூழ்நிலை மற்றும் மரத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே, இது பற்றி உறுதியான தகவல்களை கூற முடியும் என கூறுகின்றனர். அதே நேரத்தில் உண்மையிலேயே அந்த மரம் குலை தள்ளியதா அல்லது வெட்டிய மரத்தில், வேறு மரத்தின் தாரை வைத்துள்ளார்களா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.