காதலனுக்காக மதம் மாறிய காதலி.. காவல் நிலையத்தில் தஞ்சம்.. திண்டிவனத்தில் பரபரப்பு
காதலனுக்காக மதம் மாறிய காதலி.. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு திண்டிவனம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
விழுப்புரம்: திண்டினவனத்தைச் சேர்ந்த காதலனுக்காக மதம் மாறிய காதலி, இஸ்லாமிய முறைப்படி கல்யாணம் செய்து கொண்ட நிலையில், காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த முஹம்மத் அசன் (22) வேலை செய்து வருகிறார்.

அசன் வேலை செய்யும் நிறுவனத்திலேயே செங்கல்பட்டைச் சேர்ந்த திவ்யா (வயது. 21) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நட்புடன் பழகி உள்ளனர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த 5ம் தேதி காலை திவ்யா வீட்டிலிருந்து வெளியேறி, திண்டிவனத்தில் உள்ள காதலன் முகமது அசைனுடன் சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் அன்று சென்னை கோவளம் பகுதியில் உள்ள தர்காவில் திவ்யா இஸ்லாமியராக மதம்மாறினார். பின்னர் இருவரும் இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த பின், காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காதலனுக்காக மதம் மாறிய காதலி, இஸ்லாமிய முறைப்படி கல்யாணம் செய்து கொண்ட நிலையில், காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications