Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கணவரை" விட்டு காதலனோடு போலீசில் நிலையத்தில் இளம் பெண் தஞ்சம்.. விசாரணையில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சி அருகே, சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், 18 வயது பூர்த்தியானதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி அந்த இளம்பெண் தனது காதலனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இளம்பெண் தனது கணவரின் குடும்பத்தாருடன் செல்வதாக கூறிய நிலையில் பெண் காதல் கணவனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 5 ஆண்டு காதல்

5 ஆண்டு காதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஒட்டியுள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி எனும் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தனது காதல் கணவனுடன் தஞ்சம் புகுந்துள்ளார். பிரச்னை குறித்து விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஜான்சி ராணியும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்துவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ஜான்சிராணியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

 கட்டாய திருமணம்

கட்டாய திருமணம்

ஆனால் அப்போது ஜான்சிராணி சிறுமி. இருப்பினும் கிளின்டன் எனும் நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து 18 வயது பூர்த்தியாகும் வரை எந்த பிரச்னையும் இன்றி இருவரும் இருந்துள்ளனர். ஆனால் 18 வயது பூர்த்தியான நிலையில் அப்பெண் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டு தரப்பிலிருந்து இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

தஞ்சம்

தஞ்சம்

இதனையடுத்து பெண்ணை தேடும் பணியில் பெண் வீட்டார் ஈடுபட்டனர். எங்கு தேடியும் பெண் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்திலிருந்து பெண் வீட்டாருக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பின் பேரில் சென்று பார்த்தபோது அங்கு தனது மகளும் அவளது காதலனும் திருமணமான நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த பெண் வீட்டார் ஜான்சிராணியை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். உடனடியாக காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர்.

 காதல்...காதல்

காதல்...காதல்

ஆனால் சமாதானமாகாத பெண் வீட்டார் தனது மகளை தங்களுடன் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஜான்சிராணி இதனை ஏற்க மறுத்துவிட்டார். காவல்துறையினர் கேட்டதற்கு "நான் எனது கணவர் ஞானமுத்துவின் குடும்பத்தாருடன் சென்றுவிடுகிறேன்" என ஜான்சிராணி கூறியுள்ளார். இதனையடுத்து பெண்ணை காதல் கணவனுடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிறுமியாக இருந்த ஜான்சிராணிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த ஜான்சிராணியின் பெற்றோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+