விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டோ ஷூட் முதல்வர்! கமிஷன் ஏஜெண்டுகளான அமைச்சர்கள்! கொந்தளித்த சி.வி.சண்முகம்! என்னவாம்?

Google Oneindia Tamil News

விழுப்புரம் : தமிழகத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களில் கமிஷன் வாங்குவது தான் திமுகவின் நோக்கம் எனவும், அமைச்சர்கள் எல்லாம் கமிஷன் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அதிமுக ஆட்சியில் 1502 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்ததாக திமுக அரசை கண்டித்து திண்டிவனம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக பேசினார்.

விநாயகர் சதுர்த்தி 2022: அருகம்புல்லுக்கும் வெள்ளெருக்கம்பூவிற்கும் பெருமை தந்த பிள்ளையார் விநாயகர் சதுர்த்தி 2022: அருகம்புல்லுக்கும் வெள்ளெருக்கம்பூவிற்கும் பெருமை தந்த பிள்ளையார்

சி.வி சண்முகம்

சி.வி சண்முகம்

போராட்டத்தில் பேசிய சி.வி சண்முகம்," விழுப்புரம், கள்ளக்குறிச்சி வானம் பார்த்த பூமி, விவசாயிகள் பாதிக்கப்படுகிற மாவட்டங்கள், அதனால் தான் கடல் நீரரை குடிநீராக்கும் திட்டம் மக்கள் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கி 1502 கோடி மதிப்பில் கிராம மக்கள், பயன் பெறும் 669 ஊராட்சிகளுக்கு 60 எம்.எல்.டி , தண்ணீரும் திண்டிவனம், விழுப்புரம் நகராட்சி பயன்பெற வேண்டும் என தொடங்கப்பட்டது. ஆனால் வாக்களித்த மக்களுக்கு கொடுத்த சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமல், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கி வருவதோடு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து தமிழகத்தை சூறையாடிக்கொண்டு வருகிறது.

உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்

திமுக. அரசியல் சார்பாக இந்த உண்ணாவிரத போராட்டம் அல்ல. மக்கள் நலனுக்காக அறிவிக்கபட்ட திட்டங்களை ஏன் ரத்து செய்கிறார்கள் . விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ரத்து செய்து மூடிவிட்டனர் . எதற்காக ரத்து செய்தன என்று இப்போது தான் தெரிகிறது. அப்பகுதிகளில்

செம்மன் கொள்ளையடிக்க தான் பல்கலைக்கழகத்தை மூடியுள்ளனர். விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகம் வந்தால் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் வைத்துள்ள பொறியியல் கல்லூரிகள் செயல்பட முடியாது என்பதால் தான் திமுக சதி செய்துள்ளது.

கமிஷன் ஏஜெண்ட்

கமிஷன் ஏஜெண்ட்

தமிழகத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் அனைத்து திட்டங்களில் இருந்தும் கமிஷன் வாங்குவது தான் நோக்கம் திமுகவின் நோக்கம், அமைச்சர்கள் எல்லாம் கமிஷன் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார்கள் எனவும், வசூல் செய்யும் முதலாளிகளாக முதல்வர் குடும்பம் செயல்படுகிறார்கள் என்றும் விமர்சித்தார். கோவையில் அதிமுக அரசு போது 70 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைத்தது. ஆனால் தற்போது தனியார் இடத்தில் 60 கோடியில் வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்துள்ளனர். தமிழகம் முழுவதையும் பட்டா போட்டு விற்றுக்கொண்டு வருகின்றனர்.

நீட் என்ன ஆனது

நீட் என்ன ஆனது

கருணாநிதி, ஸ்டாலின், குடும்பம் வாழ்வதற்காக கொள்ளளையடித்துக்கொண்டு போட்டோ ஷூட் மட்டுமே நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது நீட் என்ன ஆனது. மாணவர்கள் தினம் தோறும் தற்கொலை செய்து வருகின்றனர். இதை பற்றி ஏன் அரசு பேசுவதில்லை, தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்திரலோக அழகப்பன் போல உள்ளார். கல்வி, மருத்துவம், குடி நீர் மக்களுக்கான வாழ்வாதாரம் , வியாபாரம் இல்லை,எனவே இதில் கணக்கு பார்க்க கூடாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் தெரிந்து கொள்ள வேண்டும்" என பேசினார்.

English summary
AIADMK former minister and Rajya Sabha member CV Shanmugam has strongly accused that all ministers are acting as commission agents ; அமைச்சர்கள் எல்லாம் கமிஷன் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X