நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. சிஎம் விஜய்க்கு மீண்டும் தலைவலி! குண்டைத் தூக்கிப் போடும் வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: இடைத்தேர்தல் மற்றும் தமிழக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக கட்சியின் அமைப்புகள் கூடி ஆலோசித்து உரிய முடிவுகளை எடுக்கும். கட்சியின் முடிவே இறுதியானது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்.

அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Veerapandian CPI Vijay

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சௌரிராஜன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மு.வீரபாண்டியன்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்," தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விலைவாசி உயர்வு

இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மருந்து, மாத்திரைகள், பால் பவுடர் உள்ளிட்ட நூறு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் கொலைகள், வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின் பிடி இறுக வேண்டும். அதே நேரத்தில், சூழ்நிலை காரணமாக சிறு தவறுகளில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களைப் பரிவுடன் அணுக வேண்டும். சிறைச்சாலைகள் சீர்திருத்தக் கூடங்களாகவும், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மையங்களாகவும் மாற வேண்டும்.

தமிழக அரசு

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முன்வர வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரணாகச் செயல்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வு இயக்கங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையம்

ஏழை மக்கள் அடுத்த வேளை உணவுக்காகத் தவிக்கும் நிலையில், ஆடம்பர விழாக்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுவது வேதனையளிக்கிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் பொறுத்தவரை, மக்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும். மக்கள் வாழும் பகுதிகளில் திட்டங்களைத் திணிக்கக் கூடாது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசாணை பிறப்பிக்கப்பட்டால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தல் மற்றும் தமிழக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக கட்சியின் அமைப்புகள் கூடி ஆலோசித்து உரிய முடிவுகளை எடுக்கும். கட்சியின் முடிவே இறுதியானது." என மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+