சசிகலாவை மீண்டும் சீண்டும் சி.வி.சண்முகம்.. மன்னிக்கவே மாட்டார்கள்.. பளீர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்ட சசிகலா, எம்ஜிஆருக்கு ஆலோசனை கூறினார் என்று சொல்வதை உண்மையான எம்ஜிஆர் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சாடினார்.

விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுகவின் வெற்றி போலியானது. அது உண்மையான வெற்றி கிடையாது. இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்று என்று தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்


உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். தோல்விக்குப் பிறகுதான் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்பது வரலாறு. அந்த வகையில், வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தொண்டர்கள் யாவரும் கவனமாக செயலாற்ற வேண்டும்.

மன்னிக்க மாட்டார்கள்

மன்னிக்க மாட்டார்கள்

எம்ஜிஆருக்கு ஆலோசனை கூறியதாக சசிகலா சொல்கிறார். யார் அந்த சசிகலா?. கடந்த 1973ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். அப்படிப்பட்ட சசிகலா எம்ஜிஆருக்கு ஆலோசனை கூறினேன் என்று சொல்வதை, உண்மையான எம்ஜிஆரின் விசுவாசிகளும், அதிமுக தொண்டர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

இரட்டை இல்லை

இரட்டை இல்லை

யார் யாரோ எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி பார்த்துவிட்டார்கள். ஆனால், எம்ஜிஆரின் ஒரே சொந்தம் இரட்டை இலை மட்டுமேதான். இரட்டை இலை இருக்கின்ற அதிமுகவை உடைக்க சதி செய்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களை உள்ளடக்கியுள்ள அதிமுகவை, எவராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்றார் அவர்.

எம்எல்ஏக்கள் பங்கேற்பு

எம்எல்ஏக்கள் பங்கேற்பு

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட ஒன்றியச் செயலா்கள் கூட்டத்தில் சி.வி.சண்முகம் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அா்ஜுனன், சக்கரபாணி, முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராமதாஸ் உள்பட பலா் பங்கேற்றார்கள். இதனிடையே கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நகரப் பொருளாளர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, சி.வி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+