செஞ்சி சிறுமி.. நள்ளிரவு டவர் டம்ப் எடுத்த போலீஸ்! விடை கொடுக்க போகும் அந்த 600.. சிபிசிஐடி பிளான் B

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, நள்ளிரவில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. காடுகள், விவசாயக் கிணறுகள், ஏரிகள் எனத் தரைவழியாக சல்லடை போட்டும் குழந்தையின் சுவடு தெரியாத நிலையில், தற்போது அதிநவீன டிஜிட்டல் மற்றும் சைபர் தடயங்களை நோக்கி காவல்துறையினரின் பார்வை திரும்பியுள்ளது.

Gingee Missing Girl Case

நள்ளிரவு டவர் டம்ப் ஆய்வு

சிறுமி மாயமான அக்டோபர் 11 நள்ளிரவு முதல் அக்டோபர் 12 அதிகாலை வரையிலான நேரத்தில், ஆலம்பூண்டி கிராமப் பகுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய காவல் துறை சைபர் கிரைம் பிரிவு களமிறங்கியது.

சிறுமி வசித்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த செல்போன் கோபுரங்களின் (Tower Dump) சமிக்ஞைகளை போலீசார் முழுமையாகத் திரட்டினர். அதாவது, அந்த குறிப்பிட்ட நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அந்த டவர் எல்லைக்குள் எந்தெந்த செல்போன் எண்கள் செயல்பாட்டில் இருந்தன, யார் யாருக்கு அழைப்புகள் சென்றன, எந்தெந்த எண்கள் புதியதாக அந்தப் பகுதிக்குள் நுழைந்தன என்ற முழு விவரங்களும் கணினி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டன.

600 பேரின் போன் அழைப்புகள் தணிக்கை

அந்த நள்ளிரவு நேரத்தில் ஆலம்பூண்டி சுற்றுவட்டார செல்போன் டவர் எல்லைக்குள் இயங்கிய 600-க்கும் மேற்பட்டோரின் செல்போன் அழைப்புத் தகவல்களை காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.

நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பேசிய எண்கள் எவை?
அந்த நேரத்தில் திடீரென சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட அல்லது நெட்வொர்க்கில் இருந்து துண்டிக்கப்பட்ட எண்கள் எவை?
வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துவிட்டு அதிகாலையிலேயே அந்த டவரை விட்டு வெளியேறிய எண்கள் எவை?

என்ற அடிப்படையில் 600 எண்களின் பின்னணியையும் தனித்தனியாகப் பிரித்து போலீசார் சரிபார்த்தனர்.

சந்தேக எண்களை டேப் செய்யும் சிபிசிஐடி

ஆய்வு செய்யப்பட்ட அந்த 600 அழைப்புகளில், குடும்பத்தினர், உறவினர்கள், உள்ளூர் பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் எண்களை அதிகாரிகள் தனியாகப் பிரித்தெடுத்துள்ளனர்.

இதில் பல முக்கிய எண்களை சிபிசிஐடி போலீசார் தற்போது ரகசியமாக டேப் (Phone Tapping) செய்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சிறுமியைக் கடத்திய நபர்கள் உள்ளூர் ஆட்களுடன் ஏதேனும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா, குழந்தையை மறைத்து வைத்திருக்கும் இடம் குறித்துப் பேசுகிறார்களா அல்லது காவல்துறையின் நடவடிக்கைகள் பற்றித் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்கிறார்களா என்பதை 24 மணி நேரமும் ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து வருகின்றனர்.

டிஜிட்டல் வலையில் சிக்குமா மர்மம்?

கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் எந்த ஆதாரமும் சிக்காத நிலையில், இந்த டவர் டம்ப் தரவுகளும், 600 எண்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்ப நடவடிக்கையுமே வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

ஏற்கனவே சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரை, திடீரென தப்பியோடிய சாமியார் மற்றும் தற்கொலைக்கு முயன்ற மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பலரும் விசாரணை வளையத்தில் உள்ள சூழலில், இந்த போன் டேப்பிங் மூலம் பேசப்படும் ரகசிய உரையாடல்கள் மிக விரைவில் சிறுமி ஹேமலதாவை உயிருடன் மீட்க உதவும் முக்கியத் தடயமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+