விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிறிஸ்டியன் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் இருந்தா வந்தாங்க? எல்லாமே நம்மாளுக தான்! அமைச்சர் பொன்முடி கலகல!

Google Oneindia Tamil News

விழுப்புரம் : தற்பொழுது தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் தான் என விழுப்புரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் தனியார் பள்ளியில் கிறிஸ்மஸ் பெருவிழா கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி. விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சர்க்கரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக உயிர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடியதோடு, அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

உதயநிதி அமைச்சரானது ரொம்ப லேட்..விரைவில் துணை முதல்வராவதை எதிர்பார்க்கிறேன்..சொல்கிறார் பொன்முடிஉதயநிதி அமைச்சரானது ரொம்ப லேட்..விரைவில் துணை முதல்வராவதை எதிர்பார்க்கிறேன்..சொல்கிறார் பொன்முடி

 அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

நிகழ்ச்சியில் பேசிய அவர்," இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சி மத வெறியை தூண்டி விட்டு அதில் ஆதாயம் தேடலாமா என்று நினைக்கின்ற ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் அதை எல்லாம் மீறி நாம் ஒன்று பட்டு இருக்கிறோம். இந்தியர்களாக இருக்கிறோம்.. தமிழர்களாக இருக்கிறோம். திராவிடர்களாக இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குவது தான் இதுபோன்ற நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

மதம் முக்கியமில்லை

மதம் முக்கியமில்லை

அன்புதான் அடிப்படை எந்த மதமாக இருந்தாலும் மதம் இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் இணைப்பது அன்பு தான். தஞ்சாவூர் சூரியனார் கோவிலில் பேசிய பரமாச்சாரியார் இந்து மத ஆச்சாரியார் பெரியார் போன்று பேசியதாகவும்.. யாரும் இங்கு சிறுபான்மையினர் இல்லை. நாம் எல்லோரும் ஒன்று நாமெல்லாம் தமிழர்கள்.. நாமெல்லாம் திராவிடர்கள் எனசொல்பவர்.. யார் தெரியுமா ஜாதியை இந்த நாட்டில் அதிகரிக்க விட்டு மத வெறியை கிளப்பி விட்டு எவ்வளவு இந்த நாட்டை பிரித்தார்களோ அதிலிருந்து வந்த ஒரு இந்து ஆச்சாரியார்.. இன்று இதைப் பற்றி பேசுகிறார் என்று சொன்னால் அதுதான் தமிழ்மண்..

எல்லாம் நம்மாளுங்கதான்

எல்லாம் நம்மாளுங்கதான்

அதுதான் திராவிடமண் அவரது பேச்சு வரவேற்கத்தக்கது. இங்குள்ள கிறிஸ்தவர்கள் எல்லாம் யாரு? ஐரோப்பா, ரோமாபுரி, ஜெருசலேத்தில் இருந்து வந்து குடியேறியவர்களா.. இவர்கள் எல்லாம் யாரு.. இவங்க தாத்தாவிற்கு அப்பா, அவர் அப்பாவிற்கு அப்பா பேரு என்னன்னு கேளு.. எல்லாம் நம்ம ஆளுங்கதான், எங்க ஆளுங்க தான். எல்லோரும் இந்துக்கள்தான். ஜெருசலத்திற்கு வேண்டுமானால் இங்கு இருப்பவர்கள் சென்று விட்டு வரலாம். ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த இந்துக்களாக இருந்து மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் தான்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

இந்துக்கள்தான் முதலியார், செட்டியார், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்கள் இப்போது இங்கு இருக்கின்ற கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள். இந்து மதத்தில் சமத்துவம் இல்லை எனவும் சமத்துவத்தை உருவாக்குவதற்காக தான் தந்தை பெரியார் இந்த திராவிட இயக்கத்தை உருவாக்கினார். மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் தான் என்ற அடிப்படை உணர்வை உருவாக்க வேண்டும் என்பதுதான் திராவிடம் மாடல் என்பதற்கான பொருள். அனைவரும் சமத்துவமாக இருக்க வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது.

 அனைவரும் ஒன்றுதான்

அனைவரும் ஒன்றுதான்

இதனை அப்பொழுதே 2000 ஆண்டுகளுக்கு முன்பே போதித்தது தான் கிறிஸ்தவம், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அவங்களுக்குள் உள்ள பிரிவினைவாதிகளை ஒன்று சேர்த்து அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். முதலில் இந்து கிறிஸ்தவர்கள் ஒன்றாக வேண்டும். அனைத்தையும் மறந்து விட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் வேண்டுகோள். அதுதான் கோரிக்கை.. சட்டமும் அதுதான்' என பேசினார்.

English summary
Speaking at a Villupuram program, Higher Education Minister Ponmudi mentioned that Christians and Muslims in Tamil Nadu are once Hindus who lived in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X