ஏரியில் மணல் கடத்தல்.. போஸ்டர் ஒட்டியவர்கள் மீது ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலைவெறி தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

செஞ்சி: மணல் கொள்ளை நடப்பதாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் முன்வர் பாஷா மற்றும் அவரது மகனான லியாகத் அலி. இவர்கள் இருவரும் இணைந்து மீனம்பூர் ஏரியில் அனுமதியின்றி மண் எடுத்து கடத்தி வருவதாக புகார் எழுந்தது.

மேலும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயத்தையும் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

போஸ்டர்கள்

போஸ்டர்கள்

இந்த போஸ்டர்களை மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலிக் உசேன், அப்துல் சமத் ஆகியோர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதோடு, மணல் கடத்தப்படுவதை கண்டித்து பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகளையும் ஒட்டினர். இந்நிலையில் ஏரி மண் கடத்துவதாக புகார் தெரிவித்து அரசு அலுவலகங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய ஷாலிக் உசேன் தனது நண்பர்களுடன் மீனம்பூர் ஏரி பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.

ஆத்திரம்

ஆத்திரம்

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகன் லியாகத் அலி மற்றும் அவர்களது நண்பர்கள் ஒன்று சேர்ந்து மண் கடத்துவதாக புகார் அளித்த ஷாலிக் உசேன், அப்துல் சமத் உள்ளிட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து காரில் இருந்து அவர்களை இழுத்து கீழே தள்ளி கால்களால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

கொலைவெறி தாக்குதல்

கொலைவெறி தாக்குதல்

இந்த கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மணல் கடத்தலை செய்தியாக்க வந்த பத்திரிகை நிருபர்களையும் லியாகத் அலி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் கைது

ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் கைது

ஷாலிக் உசேன் மற்றும் அப்துல் சமத் ஆகியோரை தாக்கியதாக ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் லியாகத் அலியை போலீஸார் கைது செய்தனர். இந்த தாக்குதலில் மூன்று பேர் லேசான காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+