விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'எதிர்க்கட்சிகள்' 4வது இடத்துக்குதான் வரும்... வாக்களித்த பின் ராமதாஸ் மகிழ்ச்சி பேட்டி

Google Oneindia Tamil News

திண்டிவனம்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டும்படி இருந்ததாகவும், தேர்தலில்அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்த பின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் வேலூரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

Ramadoss appreciate election commission after vote in tindivanam

இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், வாக்களிப்பது கடமை மட்டுமல்ல, மக்களின் உரிமை. எனவே தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும 95 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாக வேண்டும். அதற்கு ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாக்களித்து கடமையை நிறைவேற்ற வேண்டும்.

மதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு மதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டும்படியாக இருந்தது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 4வது இடத்துக்குதான் வரும்". என்றார்.

English summary
pmk leader ramadoss appreciate election commission's activities after vote in tindivanam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X