4 கதவுகளும் மூடப்பட்ட நிலையில்.. பெண் எஸ்பி 2வது நாளாக சாட்சியம்.. விழுப்புரம் கோர்ட்டில் பரபரப்பு
முன்னாள் டிஜிபி மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது
விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் வழக்கில் சாட்சியம் தருவதற்காக பெண் எஸ்பி, விழுப்புரம் கோர்ட்டில் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி, பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

கோர்ட்
அதன்படி, விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது... இந்த 3 மாதத்திற்குள் வழக்கினை விழுப்புரம் நீதிமன்றம் முடித்து வைக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்னை ஹைகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதனால், வழக்கு விசாரணையும் துரிதமாக நடந்து வருகிறது..

எச்சரிக்கை
இந்த வழக்கில் ஆஜராகாத ராஜேஷ் தாஸுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.. இதையடுத்து அவர் நீதிமன்றத்திலும் சில தினங்களுக்கு முன்பு ஆஜராகி இருந்தார்... இதனிடையே, மேலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண் எஸ்பி மற்றும் அவரது கணவரிடம் முதலில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

சாட்சி
அந்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடந்தது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, சுமார் 4 மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்..., முதலில் 30 நிமிடங்கள் சாட்சி அளித்தார்... உணவு இடைவெளிக்கு பிறகு, பிற்பகல் 2.10 மணி முதல் மாலை 5.40 மணி வரை சாட்சியம் அளித்தார்.. தொடர்ந்து, இன்றைய தினமும் அவர் சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..

சாட்சியம்
அதன்படியே முன்னாள் சிறப்பு டிஜிபி. பாலியல் வழக்கில் சாட்சியம் தர பெண் எஸ்பி, விழுப்புரம் கோர்ட்டில் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளார். பெண் எஸ்பி. சாட்சியம் அளிக்க உள்ளதால் நீதிமன்றத்தின் 4 அறை கதவுகளும் மூடப்பட்டன... அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... அதேபோல மற்ற வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications