இடுப்பு வலி சிகிச்சைக்கு வந்த இளம்பெண்.. கண்ட இடத்தில் தொட்ட மருத்துவர்.. கசக்கி பிழிந்த உறவினர்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் கண்ட இடத்தில் தொட்டு அத்துமீறலில் ஈடுபட்ட பிசியோதெரபி மருத்துவரை, இளம்பெண்ணின் உறவினர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஆனங்கூர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, இடுப்பு வலி சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். விழுப்புரம் நகரில் இயங்கி வரும் அந்த மருத்துவமனைக்கு சென்ற கல்லூரி மாணவியை சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் அங்கிருந்த பிசியோதெரபி தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி பிசியோதெரபியிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் திருந்தாத பிசியோதெரபி, தொடர்ந்து அத்துமீறியதாக தெரிகிறது. இதனால், கத்தி கூச்சல் போட்ட கல்லூரி மாணவி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக தனது உறவினர்களுக்கு போன் போட்டு தெரிவித்து இருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு உறவினர்கள் திரண்டு வந்தனர். கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பிசியோதெரபிக்கு தர்ம அடி கொடுத்தனர். சட்டை கிழியும் அளவுக்கு பிசியோதெரபியை நையப்புடைத்த இளம்பெண்ணின் உறவினர்கள், அவருக்கு மறக்க முடியாத அளவுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையே மருத்துவமனை ஊழியர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டனர். விரைந்து வந்த போலீசார், உடனே நிகழ்விடத்திற்கு வந்து பிசியோதெரபியை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இளம்பெண்ணிடம் புகாரை வாங்கிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணிடம் மருத்துவர் அத்துமீறிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவம் பற்றி கூறியதாவது:- சிகிச்சைக்காக வந்த என்னை தவறான எண்ணத்தில் அந்த பிசியோதெரபி தொட்டதோடு, கேமரா தெரிகிறது என்று ஸ்க்ரீன் துணியை இழுத்து மறைத்து போட்டார்.
நான் சொல்லிவிட்டேன். எத்தனை பெண்கள் சொல்லாமல் இருந்து இருப்பார்கள்.. இதற்கு அப்புறம் வரும் பெண்களிடமும் இப்படித்தானே நடந்து கொள்வார். நோயாளியிடம் இப்படி நடந்து கொள்ளலாமா?" என்று ஆவேசமாக கூறினார். நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதால் கடவுளுக்கு நிகரமாக மருத்துவர்களை பொதுமக்கள் பார்க்கிறார்கள்.
சிகிச்சைக்கு வரும் நோயாளியின் உடல் நலனை தேற்றுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு நோயாளியின் உயிரை காக்கும் எத்தனையோ நல்ல மருத்துவர்கள் இருக்கும் இன்றைய கால கட்டத்தில் இதுபோன்ற சில புல்லுருவிகளும் இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. பெரிய மருத்துவமனையில் வேலையில் இருக்கும் மருத்துவர்களின் நடத்தையையும் மருத்துவமனை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications