விஷ சாராய விவகாரம்.. சாட்டையை சுழற்றிய அரசு..மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
விழுப்புரம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய டி.எஸ்.பி-ஆக நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகி பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷ சராயம் அருந்தியதில் 22 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்த விவகாரத்தில் ஆக்ஷனில் தமிழக அரசு இறங்கியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த முதல்வர் மு.க ஸ்டாலின்....சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தார். மேலும் உடனடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி விஷசாரயத்தை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்து இருந்த நிலையில், விஷ சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும் தூக்கியடிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய டி.எஸ்.பி-ஆக நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் மோகனசுந்தரம், மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது டி.எஸ்.பி மணிமேகலையையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications