"சங்கி"ன்னா என்ன தெரியுமா.. பாஜகவை விடுங்க.. ஆர்எஸ்எஸ் பற்றி தெரியுமா.. எமோஷனல் ஆன திருமாவளவன்
திருமாவளவன் பாஜகவை சரமாரி விமர்சித்து பேசியுள்ளார்
விழுப்புரம்: இந்தியாவில் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்று பாஜக சொல்வது நியாயமா? ஒரே மதம், ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருவது நியாயமா? என்று விசிக திருமாவளவன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன் சங்கி என்றால் என்ன என்பதற்கான அர்த்தத்தையும் திருமா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தியார் திடலில் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்ற 3 முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி. விரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூட்டத்தில் பேசியபோது, "ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் விசிக தலைவர் தொல் திருமாவளவன் திகழ்ந்து வருகிறார்.. வீரமணி வென்றிடுக/ வெற்றிமணி ஒலித்திடுக என முன்னாள் முதல்வர் கலைஞர் கூறியது போல், தற்பொழுது தி.க தலைவர் வீரமணி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்" என்றார்.

ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும்
திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசும்போது, "திராவிட மாடல் என்றால் பெண்கள் கையில் பதவி இருப்பது தான். ஆனால் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பேசி வருவது தான் பாஜக.. பார்ப்பனர்கள் தனக்கு கீழே இருக்கும் ஜாதிகளை அவர்கள் யாரும் படிக்கக் கூடாது, படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும், அத்துமீறி படித்தால் கடுமையான தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள்.. நூறு வருடம் ஆனாலும் சரி, பாஜக கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும்" என்றார்.

ஆர்எஸ்எஸ்
இதையடுத்து, பாஜகவை கடுமையாக விமர்சித்து திருமாவளவன் பேசியதாவது: "சங்கி என்று நாம் சொல்லி வருகிறோம்.. சங்கி என்பதற்கு முழு அர்த்தம், சங்கம் அல்லது அமைப்பு ஆகும்.. ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு பாரதீய ஜனதா கட்சியை வைத்து இந்த தமிழ்நாட்டை கைப்பற்றி வருகிறார்கள்... தந்தை பெரியார் பேசிய அரசியலுக்கு நேர் எதிராகவும், அம்பேத்கர் கொள்கை கோட்பாட்டுக்கு நேர் எதிர் இயக்கமாக பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆண்ட பரம்பரை
பார்ப்பன சமூகத்தின் நலனை மையமாக கொண்டு மராட்டிய, குஜராத்திய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு.. பார்ப்பன சமூகத்தின் நலனை மையமாகக் கொண்டு மராட்டிய, குஜராத்திய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு. பிறப்பால் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள். மற்ற எல்லோரும் ஆண்ட பரம்பரை என கூறிவரும் சத்திரியர்களாக இருந்தாலும், அனைவரும் பார்ப்பனர்களுக்கு கீழ் தான் என ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ்
பாரதீய ஜனதா கட்சியின் கிளை இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு. பாஜகவுக்கு என்று எந்தவிதமான கொள்கை கோட்பாடுகளும் கிடையாது... ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை தான் இவர்களும் பின்பற்றி வருகிறார்கள்.. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உருவாக்கிய அமைப்புதான் ஜனசங்கம்.. ஆனால் அது மக்களிடம் எடுபடாமல் போயிற்று.. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மதங்களையும் அனைத்து கலாசாரங்களையும் பின்பற்ற கூடிய நாடாகும்.

திருமாவளவன்
இப்படி இருக்கும்போது, இந்தியாவில் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்று பாஜக சொல்வது நியாயமா? ஒரே மதம், ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருவது நியாயமா? இந்த நோக்கத்தில்தான் இப்போது இந்தி திணிப்பை முன்னெடுத்து வருகிறது" என்றார் திருமாவளவன்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?











Click it and Unblock the Notifications