விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் விக்கிரவாண்டியில் இன்று இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். வரும் 10 ஆம் தேதி வாகுப்பதிவு நடக்கிறது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஏன்?: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் அவர் லோக்சபா தேர்தல் பிரச்சார நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணமடைந்தார்.
தேர்தல்: இதன் காரணமாக இங்கே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோர் இன்று இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்
மாலை 6 மணிக்கு மேல் விக்கிரவாண்டியில் எவரும் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. மேலும் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் வீடுகளில் தங்கி பிரச்சாரம் மேற்கொண்ட வெளி நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கிட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீறி தங்கும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் ஆட்சியர் பழனி உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மும்முனை போட்டி: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கே பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. பாமக வேட்பாளராக சி அன்புமணி அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தொடர் தோல்வி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications