விஏஓ ன்னுகூட யோசிக்கல.. "அடங்கல்" கேட்டு அடம் பிடித்த செஞ்சி விவசாயி.. இப்போ விழுப்புரத்தில் பாருங்க
விழுப்புரம்: விஏஓ என்றும் பாராமல் மிரட்டல் விடுத்த விவசாயிக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனையை வழங்கியிருக்கிறது. என்ன நடந்தது விழுப்புரத்தில்?
சமீபகாலமாகவே, கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு, ஆங்காங்கே மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.. கடந்த வாரம்கூட, கடலூர் மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்தது.

கடலூர் அடுத்த குடிகாடு விஏஓ வாக இருப்பவர் சதீஷ்வரன்.. 48 வயதாகிறது.. இவர் சம்பவத்தன்று, அதே பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 56 வயதான சேகர் ராதாகிருஷ்ணன், அவரது 22 வயது மகன் சக்திமுருகன் ஆகியோர் இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக விஏஓவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
திடீர் வாக்குவாதம்: பிறகு திடீரென அப்பாவும், மகனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. அத்துடன், விஏஓ சதீஷ்வரனை திட்டி தாக்க முயன்றதுடன், பணியை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சேகர், சக்திமுருகன் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதுபோலவே, விழுப்புரம் மாவட்ட விஏஓவுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு தண்டனையே வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
செஞ்சியை அடுத்துள்ளது போத்துவாய் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்.. 46 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி ஆவார்.. கடந்த 2021ம் ஆண்டு, தன்னுடைய நிலத்தில் பயிரிட்ட நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக, விஏஓ சம்பத்குமாரிடம் மனு ஒன்றினை அளித்திருந்தார்.
செஞ்சி தாலுகா: இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி சம்பத்குமார், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த ராமகிருஷ்ணன், "என்னுடைய மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" கேட்டார்... இதுவே அவர்களுக்குள் வாக்குவாதமும் வெடித்தது.. பிறகு ராமகிருஷ்ணன் தன்னுடைய நிலத்திற்கு அடங்கல் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு விஏஓ சம்பத்குமார், "உங்கள் நிலத்தில் பயிர் செய்யாததால், அடங்கல் தரமுடியாது" என்றார்.. இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், சம்பத்குமாரை திட்டி சரமாரியாக மிரட்டல் விடுத்தார்.
தண்டனை அறிவிப்பு: இதனால் சம்பத்குமார், ராமகிருஷ்ணன் மீது போலீசில் புகார் அளித்ததையடுத்து, ராமகிருஷ்ணன் செஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. இதையடுத்து, அவர் மீது விழுப்புரம் எஸ்.சி., - ,எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, ராமகிருஷ்ணனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications