பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் பலி..? அதிர்ச்சி சம்பவம்.. ஹோட்டலில் அதிரடி ரெய்டு.. தீவிர விசாரணை!
செஞ்சி : விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் உயிரிழந்ததற்கு காரணம் பாஸ்தா தானா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவத்தால் ஏற்பட்டிருந்த பீதியே இன்னும் அகல்வதற்குள், குழந்தைகளின் ஃபேவரிட் உணவான பாஸ்தாவிலும் பிரச்சனை ஏற்பட்டிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலியான இளம்பெண் பாஸ்தா சாப்பிட்ட கடையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள அன்னியூரைச் சேர்ந்தவர் பிரதீபா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை காதலித்து, கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பிரதீபா - விஜயகுமார் தம்பதியர் இரவு, திருவாமாத்துார் விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஸ்தா சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

திடீர் பலி
வீட்டுக்குச் சென்றபின் இரவு 11.30 மணியளவில் பிரதீபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன குடும்பத்தினர் பிரதீபாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீபா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

சாவில் சந்தேகம்
பிரதீபாவின் தந்தை பழனிவேல், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹோட்டலில் ஆய்வு
பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, விழுப்புரம் புறவழிச்சாலையில், பிரதீபா சாப்பிட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஃப்ரீசரில் வைத்திருந்த வேகவைத்த சேமியாவை கைப்பற்றி அழித்தனர். மேலும், வெள்ளை நிற பாஸ்தாவை உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ரிப்போர்ட் வந்த பிறகே
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பிரதீபாவுக்கு இதய நோய் இருந்ததால் அவர் மாத்திரை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. எனவே பிரதீபாவின் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே, அவர் பாஸ்தா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா அல்லது இருதய பாதிப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷவர்மா
சமீபத்தில், கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications