என்னங்க.. நான் தூக்குல தொங்க போறேன்.. கணவனுக்கு போன் செய்து விட்டு கர்ப்பிணி தற்கொலை!

கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கணவனுக்கு போன் செய்து சொல்லிவிட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை-வீடியோ

    கள்ளக்குறிச்சி: "என்னங்க.. நான் தூக்குல தொங்க போறேன்" என்று கணவனுக்கு போன் செய்து சொன்ன கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Young Wife committed suicide near Kallakkurichi

    கள்ளக்குறிச்சி தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கு பாரதி என்பவருடன் 6 மாசத்துக்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. பாரதி, கட்டிட கூலி தொழிலாளி.

    இந்நிலையில், ஐஸ்வர்யா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்காக அகரக்கோட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாரதி, மனைவியை அழைத்து கொண்டு செக்-அப்புக்காக வந்தார்.

    கர்ப்பமாக இருப்பது உறுதியானதும், மாமியார் வீட்டில் கொண்டு போய்விட்டு விட்டு, வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பாரதிக்கு போன் செய்த ஐஸ்வர்யா, "நான் தற்கொலை செய்துக்க போறேங்க" என்று சொல்லி உள்ளார். ஆனால் ஐஸ்வர்யா தன்னிடம் விளையாட்டுக்கு அப்படி சொல்கிறார் என்று பாரதி நினைத்து, அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார்.

    இதனிடையே நீண்ட நேரம் கழித்து, வெளியில் சென்றிருந்த ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் நுழைந்தபோது, மகள் தூக்கில் சடலமாகத் தொங்கியதை கண்டு அலறினார். இது குறித்து பாரதிக்கு தகவல் சொல்லவும்தான் விபரீதம் புரிந்தது. தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் கல்யாணம் ஆகி 6 மாதமே ஆவதால், சார் ஆட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது. மாமியார் வீட்டில் நிம்மதி இல்லை என்று அடிக்கடி ஐஸ்வர்யா தன் அம்மாவிடம் சொல்லி வந்திருப்பதாக தெரிகிறது. எனினும் போலீசார் இது சம்பந்தமான முழுவிசாரணையை கையில் எடுத்து எடுத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+