ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டுக்கு மின் கட்டணம் ரூ. 10,451 மின் கட்டணமா? மின்வாரியம் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டுக்கு ரூ.10,451 மின் கட்டணமாக வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். ஆடு மேய்க்கும் தொழிலாளி. மனைவி, குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக இவருடைய வீட்டிற்கு மின் கட்டணமாக வெறும் 100 ரூபாயே வந்துள்ளது. ஆனால், கடந்த முறை ரூ.700 என கட்டணம் வந்தபோது மல்லிபுதூர் மின்வாரிய அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இவருக்கு கடந்த மாத மின்கட்டணத்தொகை ரூ.10,938 வந்துள்ளது.

Electricity Board

அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும், அதிக தொகை வந்துள்ளதால் அவரால் மின் கட்டணத்தை கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மின் கட்டணத்தை செலுத்தாததால், அவரது வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின் வாரியம், "திருவில்லிபுத்தூர், இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இராஜேந்திரன் த/பெ பிச்சை தேவர் என்பவரது வீட்டு மின் இணைப்பு எண்: 07268001199 ல் கடந்த 07/2026 ம் மாதம் ரூ.700/- மின் கட்டணம் வந்ததை தொடர்ந்து மின் வாரிய அலுவலர்களால் 31/07/2026 மற்றும் 02/08/2026 ஆகிய தினங்களில் மின் அளவி ஆய்வு செய்யப்பட்டு Check Reading-ம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆய்வில் மின் அளவி நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டும் 09/2026 ம் மாத மின் கட்டணம் ரூ.10,451 ஆக பதிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து 02/09/2026 அன்று மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது.

கள ஆய்வில், இராமகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் Air Cooler உபயோகத்தில் இருந்ததாலும், கடந்த 09/2024 மற்றும் 11/2024 ஆகிய காலகட்டங்களிலும் இதே அளவு பயன்பாடு இருந்துள்ளது குறித்தும் இராமகிருஷ்ணன் அவர்களிடம் எடுத்துரைத்த போது அதனை ஏற்றுக்கொண்டு தான் 10 தினங்களில் மின் கட்டணம் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், மின்கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாததால் 24/9/2026 அன்று மின் துண்டிப்பு செய்யப்பட்டது என்ற விபரம் பணிந்து சமர்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மின் அளவியின் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், கணக்கீட்டாளர் கடந்த 12 மாதங்களாக மின் அளவை குறைத்து தவறாக பதிவு செய்ததன் காரணமாகவும், சிறப்பு ஆய்வில் சரியான மின் அளவு பதிவு செய்யப்பட்டதன் காரணமாகவும், 09/2026 ம் மாதத்தில் ரூ.10,451/- மின் கட்டணம் கணக்கீடாகியுள்ளது என்ற விபரம் பணிந்து சமர்பிக்கப்படுகிறது.

எனவே, மின் அளவி ஆய்வாக அறிக்கையின் (CMRI தரவிறக்கம்) அடிப்படையில், மின் கட்டணம் திருத்தப்பட்டு தற்போது நிலுவைத்தொகையாக ரூ.4054 கணக்கிடப்பட்டுள்ளது. தவறு செய்த மின் கணக்கீட்டாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரமும் பணிந்து சமர்பிக்கப்படுகிறது. மேலும், இராமகிருஷ்ணன் திருத்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியதை தொடர்ந்து, இன்று மறு மின் இணைப்பு வழங்கப்பட்டது என்ற விபரமும் பணிந்து சமர்பிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+