மிட்நைட்டில்.. புது மனைவியை காணோமாம்.. விருந்துக்கு போன இடத்தில் அக்கப்போரு.. இது விருதுநகர் டுவிஸ்ட்
விருதுநகர்: தூக்கம் கலைந்து கண்விழித்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை காணவில்லையாம்.. இதனால் பதறிப்போய்விட்டார் புதுமாப்பிள்ளை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது தென்கரை என்ற பகுதி. 21 வயதாகிறது.. இவருக்கு ராஜபாளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞருடன், கடந்த மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம்: இரு வீட்டிலுமே பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் இதுவாகும்.. எனவே, உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இந்த திருமணம் ஜரூராக நடந்து முடிந்தது..
இந்நிலையில், புதுமணத்தம்பதி இருவரும், மாரீஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு, மறு வீட்டு விருந்துக்காக சென்றிருக்கிறார்கள்.. சம்பவத்தன்று இரவு, விருந்து சாப்பிட்டுவிட்டு, தூங்குவதற்காக சென்றார்கள்.. அப்போது நள்ளிரவில் தூக்கம் கலைந்து, மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தபோது, பக்கத்தில் படுத்திருந்த மனைவியை காணவில்லையாம்.
அதிர்ச்சி: இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, மாரீஸ்வரியை வீடு முழுவதும் தேடினார்... பிறகு உறவினர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, அவர்களையும் தேட சொன்னார்.. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும்கூட, மாரீஸ்வரியை எங்கும் கிடைக்கவில்லை.,. இதனால், பதறிப்போன மாப்பிள்ளை, போலீசில் புகார் தந்தார்.
போலீசாரும் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தபோதுதான், தென்கரையைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்ற இளைஞர் மீது சந்தேகம் விழுந்தது.. சுப்பையா பாண்டியனும், மாரீஸ்வரியும் ஏற்கனவே உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.. எனவே, காதலனுடன் மாரீஸ்வரி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், அவரை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சோகம்: மாரீஸ்வரியின் காதல் கதையை கேட்டதுமே, மாப்பிள்ளை அதிர்ந்து போய்விட்டார். கல்யாணத்துக்கு முன்பு, மாரீஸ்வரி என்னுடன் போனில் பேசும்போது நல்லாதான் பேசினார்.. எதுவும் நடக்காதது போல பேசினாரா? இப்போது என்னுடைய எதிர்கால கனவுகளையே சிதைத்து விட்டாரே" என்று நொந்து போய் சொல்கிறாராம் மாப்பிள்ளை.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications