கன மழை எச்சரிக்கை.. சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை..பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர்: மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேற வனத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லவும் மலையேறி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாத அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

ஓடைகளில் வெள்ளம்
கடந்த மாதம் ஐப்பசி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பலத்த மழை பெய்ததால் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த மாதமும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

வனத்துறை அறிவிப்பு
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,இன்று முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருகிற 23ஆம் தேதி கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

பக்தர்கள் ஏமாற்றம்
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24ஆம் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications