விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனுக்கு வந்த எச்.ராஜா.. அண்ணாமலை - காயத்ரி சண்டை பற்றி கருத்து! ‘ஓபனா பேச வேணாம்’ என அட்வைஸ்

Google Oneindia Tamil News

விருதுநகர்: காயத்ரி ரகுராம் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு இருந்தால் மாநில தலைமையிடமோ அல்லது தேசிய தலைமையிலோ தெரிவித்து இருக்கலாம் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருக்கிறார். கட்சி பிரச்சனையை பொது இடத்தில் விவாதிக்க மாட்டேன். யாரும் அதுகுறித்து பொது வெளியில் பேச வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

விருதுநகர் சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் இருக்கன்குடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மணல் குவாரி அமைப்பதற்கும் திமுக அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

சுப்ரமணியன் சாமி எவ்ளோ பெரிய மனுஷன்.. அண்ணாமலை அவரையும் மதிக்கல! புதிய பஞ்சாயத்தை கிளப்பும் காயத்ரி சுப்ரமணியன் சாமி எவ்ளோ பெரிய மனுஷன்.. அண்ணாமலை அவரையும் மதிக்கல! புதிய பஞ்சாயத்தை கிளப்பும் காயத்ரி

எச்.ராஜா பேட்டி

எச்.ராஜா பேட்டி

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா இருக்கன்குடி வைப்பாற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும். எல்லா ஆறுகளிலும் மணல் அள்ளுவதற்கு நான் எதிரானவன். இந்த பகுதியில் மணல் குவாரி அமையும் பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே இந்த மணல் குவாரியை அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் என் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் மதம் மாற்றம்

அறநிலையத்துறை அதிகாரிகள் மதம் மாற்றம்

கோவில்களில் ஆய்வு செய்ய யார் செல்கிறார்கள் என்பது முக்கியம். எனவே இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே மதம் மாறி இருப்பதாக கூறும் சூழ்நிலையில் கோவில் நிர்வாகத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மீகம் தவிர்த்த எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது.

தீபாவளிக்கு வாழ்த்து இல்லையா

தீபாவளிக்கு வாழ்த்து இல்லையா

புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பட்டியலில் தீபாவளி பண்டிகை இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டப்படியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் பாஜக இல்லை என்று சொன்ன காலம் போய் இன்று எதிர்கட்சி போல் பாஜக செயல்படுகிறது.

அண்ணாமலை - காயத்ரி ரகுராம் சண்டை

அண்ணாமலை - காயத்ரி ரகுராம் சண்டை

தனிப்பட்ட முறையில் காயத்ரி ரகுராம் பாதிக்கப்பட்டால் மாநில தலைமையிடமோ அல்லது தேசிய தலைமையிலோ தெரிவிக்காலாம் என்றார். கட்சி பிரச்சனையை பொது இடத்தில் விவாதிக்க மாட்டேன். கட்சி குறித்து பொது வெளியில் யாரும் பேச வேண்டாம். பாரத பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய தலைமை எந்த வித முடிவும் எடுக்கவில்லை.

பிரதமர் மோடி தமிழ்நாடு போட்டியா?

பிரதமர் மோடி தமிழ்நாடு போட்டியா?

இந்தியாவில் உள்ள 544 தொகுதியிலும் நிற்க தகுதியான நபர் பிரதமர் மோடி மட்டும் தான். அப்படி போட்டியிட்டால் மகிழ்ச்சியுடன் பணியாற்ற கடமைப்பட்டு இருக்கிறோம். திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் யோசிக்க வேண்டும்.

திமுக மீது விமர்சனம்

திமுக மீது விமர்சனம்

பாஜக கட்சியை பற்றி அவர் பேச தேவை இல்லை. கே.என்.நேரு இன்பநிதிக்கு குடை பிடிப்பேன் என்று சொல்வதில் இருந்தே தெரிகிறது சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக என்று. இந்த நிகழ்வின்போது கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்கள்.

English summary
Former BJP National Secretary H. Raja said that if Gayathri Raghuram was personally affected, he could have informed the state leadership or the national leadership. I will not discuss party issues in public. He advised that no one should talk about it in public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X