விருதுநகர் வேட்பாளர் யார் தெரியுமா? மீண்டும் வெல்லுமா காங்கிரஸ்? தொகுதியின் கள யதார்த்தம் இதுதான்
விருதுநகர்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் விருதுநகர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிட வாய்ப்புள்ளது? தொகுதியின் களநிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 2019 தேர்தலைபோலவே இந்த முறை விருதுநகர் தொகுதியை திமுகவிடம் கேட்டு காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இந்த தொகுதியை பொறுத்தமட்டில் மொத்தம் 6 சட்டசபைகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளும், மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் விருதுநகர் லோக்சபா தொகுதியாக உள்ளது.
திருவள்ளூர் தொகுதி.. காங்கிரஸ் வேட்பாளர் மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்? மெகா பிளான்
விருதுநகர் லோக்சபா தொகுதி கடந்த 2009 ம் ஆண்டில் உருவானது. இந்த தொகுதி இதுவரை 3 முறை தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் தொகுதி உருவான 2009 ல் விருதுநகரில் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதிமுகவின் வைகோவை வெறும் 15,764 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாகை சூடினார்.
மணி சங்கர் அய்யரின் கோட்டை! மயிலாடுதுறையில் வெல்லுமா காங்கிரஸ்.. வேட்பாளர் யார்? களநிலவரம் இதுதான்
அதன்பிறகு இந்த தொகுதியில் 2014ல் தேர்தல் நடந்தது. இதில் சிட்டிங் எம்பியாக காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய மாணிக்கம் தாகூர் மோசமான தோல்வியடைந்தார். மேலும் 4 வது இடத்துக்கு தள்ளப்பபட்டார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவர் மதிமுக வேட்பாளர் வைகோவை 1 லட்சத்து 45 ஆயிரத்து 551 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 3வது இடத்தை திமுக வேட்பாளர் ரத்தினவேலு பிடித்த நிலையில் மாணிக்கம் தாகூர் 38,482 ஓட்டுகள் மட்டுமே பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விருதுநகர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டார். இந்த தேர்தலில் மாணிக்கம் தாகூர் எம்பி 4,70,883 ஓட்டுகளை பெற்றார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை அழகர் சாமியை (பெற்ற வாக்குகள் 3,16,329) விட 1 லட்சத்து 54 ஆயிரத்து 554 ஓட்டுகள் அதிகம் அந்த தேர்தலில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்பியாக மாணிக்கம் தாகூர் உள்ளார். இவர் காங்கிரஸ் மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் மாணிக்கம் தாகூருக்கு நல்லபெயர் உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மாணிக்கம் தாகூரின் செயல்பாடும் முக்கியமானது. ஏனென்றால் அவர் தெலுங்கானா மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு உள்கட்சி விவகாரங்களை சரியாக கையாண்டு காங்கிரசுக்கு உதவினார். தற்போது மாணிக்கம் தாகூர் எம்பி ஆந்திரா மேலிட பொறுப்பாளராக உள்ளார். மேலும் லோக்சபாவில் காங்கிரஸ் கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூரே போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாவிட்டது.
மேலும் விருதுநகர் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் சொந்த மாவட்டமாகும். இதனால் இயல்பாகவே அங்கு இன்று வரை காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடும்படியாக ஓட்டு சதவீதம் உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியும், திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இது மாணிக்கம் தாகூர் எம்பிக்கு பாசிட்டிவ்வாக அமையலாம். அதேவேளையில் பாஜக மற்றும் அதிமுக சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களின் பிளஸ், மைனஸை பொறுத்தே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications