"பணம் கொடுக்கிறதும் தெரிய கூடாது.. வாங்கிறதும் தெரிய கூடாது".. அப்படியே போட்டுடைத்த ராஜேந்திர பாலாஜி

திமுக தலைவரை விமர்சித்து பேசினார் ராஜேந்திர பாலாஜிதிமுக தலைவரை விமர்சித்து பேசினார் ராஜேந்திர பாலாஜி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "மொதல்ல ஸ்டாலின் வைத்திருக்கும் பெயரே தமிழ் பெயர் கிடையாது.. ரஷ்ய நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு, தமிழை பற்றிப் பேசும் யோக்கியதை ஸ்டாலினுக்கு கிடையாது.. திமுக வாடி வதங்கி நொந்து நூலாகி சாகும்வரை திமுகவிற்கு ஓட்டுப் போட நினைப்பவர்கள் மட்டும் தான் ஓட்டு போடுவார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

தேர்தல் காலம் நெருங்குகிறது.. வழக்கமாக திமுக என்றாலே எகிறி பாயும் ராஜேந்திர பாலாஜி, சமீப காலமாக சற்று காட்டமாகவே பேசி வருகிறார்.. அதிலும் தன்னை ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து, அரசியல் நாகரீகமும் மறந்து, பொதுவெளி என்பதையும் மறந்து, கெட்ட வார்த்தையிலும், ஒருமையிலும் ஸ்டாலினை பேசியதன் அதிர்ச்சி இன்னும் மக்களுக்கு விலகவில்லை.

இந்நிலையில், மறுபடியும் திமுகவை குறி வைத்து சிவகாசியில் அமைச்சர் பேசியுள்ளார்.. வரும் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதன் சுருக்கம் இதுதான்:

 மட்டன்

மட்டன்

"விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கூட்டம் போட்டாலே எல்லாருக்கும் மட்டன் சாப்பாடு தான்.. கிடா வெட்டு தான்.. எல்லாருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம்தான் அதிமுக மட்டுமே.. திமுக ஒரு ஐம்பெரும் தலைவர்கள் மட்டுமே இருக்கும் கட்சி.. இப்போ அந்த கட்சி வடநாட்டுகாரரை நம்பி இருக்கு. அவர் சொன்னால் மக்கள் ஓட்டு போட்டுடுவாங்களா? நான் ஓபனாதான் பேசறேன்.

 ரகசிய ஆலோசனை

ரகசிய ஆலோசனை

இப்போ தேர்தல் எதுவும் நடக்கவில்லை.. இதை பத்திரிகையாளர்கள் பதிவுகூட பண்ணிக்குங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது... ஒன்னும் கவலையும் கிடையாது.. இதையெல்லாம் இப்போதுதான் பேசமுடியும்... தேர்தல் அறிவித்துவிட்டால், கொடுப்பது தெரியக்கூடாது.. வாங்குவது தெரியக்கூடாது.. எடுப்பதும் தெரியக்கூடாது.. ரகசியக்கூட்டம்.. ரகசிய ஆலோசனை இப்படி எல்லாமே பண்ணுவோம். எப்படி, எப்படி ஜெயிப்பது என்று எங்களுக்கு தெரியும்.

அண்ணா

அண்ணா

திமுகவிற்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் யாருடைய ஓட்டும் கிடைக்காது.. திமுக வாடி வதங்கி நொந்து நூலாகி சாகும்வரை திமுகவிற்கு ஓட்டுப் போட நினைப்பவர்கள் மட்டும் தான் ஓட்டு போடுவாங்க.. இன்னைக்கும் ஸ்டாலின் திமுக, பத்துக்கு பத்து அறையில்தான் உள்ளது.. அண்ணா ஆரம்பித்த திமுக இப்போது இல்லை.

தமிழர்கள்

தமிழர்கள்

மொதல்ல ஸ்டாலின் வைத்திருக்கும் பெயரே தமிழ் பெயர் கிடையாது.. ரஷ்ய நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு தமிழைப் பற்றிப் பேசும் யோக்கியதை ஸ்டாலினுக்கு கிடையாது... தமிழர்களைப் பற்றி பேசும் உரிமை அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு.. தமிழருக்கும், தமிழுக்கும் துரோகம் செய்து, தமிழை விற்றுப் பிழைக்கும் கூட்டம் தான் திமுக" என்றார் ராஜேந்திர பாலாஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+