எல்லாமே வதந்தி.. கீர்த்தனா என் உடன்பிறந்த சகோதரி.. கை பிடித்து தூக்கிய ஜெகதீஸ்வரி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெகவிலும் உள்கட்சி பிரச்சனைகள் அதிகமுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன. விருதுநகரில் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா இடையே வெளிப்படையாகவே பனிப்போர் நிலவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில், கீர்த்தனாவின் கையை பிடித்து, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா கலந்து கொண்டனர். அப்போது ஜெகதீஸ்வரி பேசுகையில், "சகோதரி அமைச்சர் கீர்த்தனா என் உடன்பிறந்த தங்கை தான். சில வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். அவரை என் உடன்பிறந்த சகோதரியாக நினைத்து தான் நான் பழகிறேன். அதே போல அவரும் என்னை அக்காவாக நினைத்து தான் பேசுகிறார். நாங்கள் அப்படித்தான் பயணிக்கிறோம். சமூகவலைதளங்களில் பரவுவது எல்லாம் பொய்யான தகவல்.

no-rift-between-us-minister-jegatheeswari-holds-keerthanas-hand

ஒளிவு மறைவு இல்லை

அதற்கு எங்கள் ஒற்றுமை தான் சாட்சி" என்று கீர்த்தனாவின் கையை பிடித்து தூக்கினார். தொடர்ந்து பேசிய ஜெகதீஸ்வரி, "சகோதரி கீர்த்தனா விருதுநகரில் பல சேவைகளை செய்தார். பல விஷயங்களை செய்தார். அதனால் முதலமைச்சர் அவர்கள், சகோதரி மீது நம்பிக்கை வைத்து அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். சீண்டுபவர்கள் சீண்டட்டும், போற்றுவோர் போற்றட்டும். நாங்கள் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக செயல்படுகிறோம். எந்த ஒளிவு மறைவும் இல்லை. இதுதான் உண்மை.

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாங்கள் ஒற்றுமையாக தான் செயல்படுவோம். இது உறுதி. இதுதான் நிதர்சனம். இதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரியுடன் இணைந்து, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை விஷயங்களை சரி செய்து கொடுப்போம். நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

ஒற்றுமையே பலம்

எங்களுக்கு எந்த பாகுபாடும் இல்லை. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற வேறுபாடு இல்லை. ஒற்றுமையாக செயல்படுவதை தான் நாங்கள் விரும்புகிறோம். மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதைத்தான் முக்கியம் என்று பொறுப்பு அமைச்சராக நினைக்கிறேன். இதுதான் எங்களுக்கு முதலமைச்சர் கற்று கொடுத்துள்ளார். இதுதான் ஆரம்பம். இனி நீங்கள் கேட்டு கொண்ட ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

எம்எல்ஏ தம்பி கார்த்தி உங்களுக்காக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஓடி வருவார். உங்கள் பிரச்சனைகளை நீங்கள் மனுவாக அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுப்பார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் சரி செய்து கொடுப்பார்கள். நம்முடைய விருதுநகரில் 2 பெண் அமைச்சர்கள் என்று கூறுவதை விட, 2 பெண் புலிகள் என கூறலாம். நாங்கள் புலிகளும் இல்லை. நாங்கள் சிங்க குட்டிகள். விருதுநகர் மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+