எனக்கே விபூதி அடிச்சீட்டீங்கல்ல! பாஜக லோக்கல் கையிடம் ஆட்டைய போட்ட மாவட்ட தலைகள்! பரபர விருதுநகர்!
விருதுநகர் : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சத்தை மோடி செய்த பாஜக நிர்வாகி கலையரசன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ள நிலையில்,புகார் கொடுத்ததும் பாஜக நிர்வாகிதான் என்பது லோக்கல் அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
என்னதான் ஆச்சு தமிழக பாஜகவுக்கு என்பது போல் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் தொடங்கி கட்சியின் கடைநிலை தொண்டர்கள் வரை அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். கேடி ராகவன், டெய்சி ராணி - சூர்யா சிவா சர்ச்சை, காயத்ரி ரகுராம் நீக்கம், என அடுத்தடுத்து ஏதாவது பிரச்சினைகள் அடிக்கடி எழுகிறது.
இது ஒரு புறம் என்றால் மாவட்ட அளவிலான தலைவர்களும் அடுத்தடுத்து பல வழக்குகள் சிக்கி வருகின்றனர். குறிப்பாக மோசடி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கைதாவது என அடுத்தடுத்து வெளிவரும் செய்திகளால் கட்சி தலைமை கடும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகி
இந்நிலையில் விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சத்தை மோடி செய்த பாஜக நிர்வாகி கலையரசன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பாஜகவில் சிவகாசி மாநாகராட்சியில் துணைத்தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு ரயில்வே மற்றும் துறைமுகத்தில் வேலை வாங்க வேண்டுமென நினைத்துள்ளார்.

9 லட்சம் மோசடி
இதனையடுத்து இருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசன் மற்றும் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் பாண்டியனிடம் 2017ம் ஆண்டு 9 லட்சம் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களில் ஒருவருக்கு ரயில்வே துறையிலும் தன்னுடைய இளைய மகனுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய படி அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்து உள்ளனர்

பவுன்ஸ் செக்
இந்த நிலையில் அரசு வேலைக்கு கொடுத்த பணத்தை பாண்டியன் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசனிடம் திருப்பி கேட்டு வந்து உள்ளார். கலையரசன் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்து உள்ளார். அதனை பாண்டியன் வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து உள்ளது.

கைது
இந்த நிலையில் தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறி விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசன் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாண்டியன் புகார் அளித்தார். பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications