விருதுநகர் மாலதி மறுமணம் செய்ய ஆசைப்பட்டு.. 33 சவரன் நகை அடமானம்... ஹீரோவாக நினைத்தவர் ஜீரோ ஆனார்
விருதுநகர்: கணவனை இழந்த பெண்ணை திருமண ஆசை காட்டிய நபர் ஒருவர் ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில், அந்த பெண்ணின் வாழ்க்கை மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. கடந்த 2 வருடங்களாகவே நடைபெற்று வரும் இந்த வழக்கில் மீண்டும் திருப்புமுனை சம்பவம் நடந்து விருதுநகர் மாவட்டத்தை அதிர செய்துள்ளது.. என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது செட்டியார்பட்டி.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாலதி,, இவருக்கு 35 வயதாகிறது.. திருமணமாகிவிட்டது.. ஆனால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் மாலதி. தன்னுடைய 9 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார் மாலதி...

அடமானம் வைக்கப்பட்ட மாலதி நகை
இந்த நிலையில் மாலதிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ராம் குமார் என்ற இளைஞருக்கும் கடந்த 2023-ல் தொடர்பு ஏற்பட்டது. மாலதியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை சொன்ன ராம்குமார், அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை ராம்குமார் வாங்கி விட்டார்.. அந்த நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து பணமும் பெற்றுள்ளார்.
6 மாதங்கள் கழித்தும் ராம்குமார் அந்த நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி, ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி மதுரை ஐகோர்ட்டில் மாலதி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது ராம்குமார் கோர்ட்டில் ஆஜராகி, முன்பணம் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் கழித்து நகைகளை திரும்ப கொடுப்பதாகவும் உறுதி தந்தார்..
33 சவரன் தங்க நகைகள்
ஆனால், அதற்கு பிறகு அவர் அந்த பணத்தையும் தரவில்லை.. நகைகளையும் தரவில்லை. மேலும் வழக்கு வாய்தா வுக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார்.
இந்த புகாரில் வழக்குப்பதிவு செய்த தளவாய்புரம் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராம்குமார் (36) என்பவரை கடந்த 2023-ம் ஆண்டே கைது செய்தனர்.. இதுகுறித்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாலதியை செல்போனில் தொடர்பு கொண்ட சத்யசீலா என்பவர், ராம்குமாரால் நானும் உன்னை போல ஏமாந்துவிட்டேன்.. என்னுடன் வந்து நீயும் சேர்ந்து தந்தால், இழந்த நகையை மீட்டு தருகிறேன்" என்று சொல்லி அழைத்துள்ளார்..
கணவனை இழந்த பெண் மாலதி
உடனே இதை நம்பிய மாலதி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார்.. ஆனால் அங்கே வந்தபோதுதான் தெரிந்தது தன்னிடம் போனில் பேசியது ராம்குமார் நண்பர் சத்யசீலா என்பது..
ராம்குமாரும், சத்யசீலாவும் மாலதியிடம், புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாலதி, மீண்டும் போலீசில் புகார் தந்தார்...
இந்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி ராம்குமார், சத்யசீலா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சத்யசீலாவை கைது செய்துவிட்டனர்.. ஆனால் ராம்குமார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதானவர் ட்விஸ்ட்
கைது செய்யப்பட்ட சத்யசீலா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவராம்.. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கொலை வழக்கில் ராம்குமாருடன் சேர்ந்து கைதானவர்.. இந்த கொலை வழக்கு காரணமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.. இப்போது மாலதியை மிரட்டியதால், மீண்டும் கைதாகி ஜெயிலில் கம்பி எண்ணிகி கொண்டிருக்கிறார்...!!












Click it and Unblock the Notifications