"அக்கிரமம்".. கருணாநிதிக்கு 134 அடி சிலை எதுக்கு.. அப்படியானால்.. ஆவேசத்துடன் கேள்வி எழுப்பும் தமிழக பாஜக
கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது
விருதுநகர்: திருவள்ளுவரை விட 1 அடி கூடுதலாக கருணாநிதிக்கு 134 அடி சிலை எதற்கு? இதுவே தமிழக அரசின் ஆணவத்தை காட்டுகிறது... அப்படியானால் திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா? என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் திமுகவிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக அரசை கடுமையாக சாடி பேட்டி தந்தார்.
அப்போது அவர் பேசியபோது, "விருதுநகரில் மத்திய அரசின் ஜவுளி பூங்கா வருவதை தமிழக அரசு தடுக்கிறது.. தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது.. ரூபாய் இரண்டு லட்சம் கோடி மதிப்பில்லான முதலீடு ஆந்திராவிற்கு சென்றுவிட்டது இது தமிழ்நாட்டிற்கு வருத்தமளிக்கும் செய்தி..

பர்மிஷன்
பின்தங்கிய மாவட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜவுளி பூங்காவை விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க உத்தரவளித்தது இதை தமிழக அரசும் அமைச்சர்களும் கொண்டாடியிருக்க வேண்டும்.. ஆனால் தமிழக அரசு, ஈகோ காரணமாகவே ஜவுளி பூங்கா அமைப்பதை தவிர்த்து வருகிறது.. கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு, மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.. மத்திய அரசு தன்னிடம் அனுமதி வழங்கலாமா? என்று கேட்டால் வழங்கக் கூடாது என்றுதான் நான் சொல்வேன்..

கலைஞர் - திருவள்ளுவர்
முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டு, அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க பணம் இல்லை என்றும் சொல்லிவிட்டு, 84 கோடியில், கருணாநிதிக்கு கடல் நடுவே பேனா நினைவுச் சின்னம் அமைப்பதாக சொல்வதெல்லாம் அக்கிரமம்.. திருவள்ளுவர் பெரியவரா? கருணாநிதி பெரியவரா?.. திருவள்ளுவரை விட 1 அடி கூடுதலாக கருணாநிதிக்கு 134 அடி ஏன்? இதுவே தமிழக அரசின் ஆணவத்தை காட்டுகிறது... அப்படியானால் திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா?

சந்தோஷப்படுவேன்
மத்திய அரசின் சுற்றுசூழல்துறை இதற்கு அனுமதிக்க கூடாது.. அப்படி அனுமதிக்காவிட்டால் நான் அதை வரவேற்பேன்.. சந்தோஷப்படுவேன். தேசியக் கொடியை சமூக வலைதளங்களின் முகப்புகளில் மாற்ற மோடி சொன்னது, தற்பொழுது வரை ஒரு கோடி நபர்கள் வைத்திருக்கிறார்கள்.. பிரதமர் மோடி சொன்னதை மக்கள் நம்பி ஏற்றுக் கொள்கின்றனர்.. காரணம், அதை சொல்லும் தகுதியும் உரிமையும் மோடிக்கு உள்ளது.. ஆனால், இதையே தமிழக முதல்வர் சொன்னால் மக்கள் கேட்க மாட்டார்கள்.. ரூபாய் 2 லட்சம் கோடி முருகப்பா குரூப் ஏன் ஆந்திரா சென்றார்கள்? இங்கே விட அங்கு எளிமையான முறை உள்ளது...
Recommended Video

ஓடுகிறார்கள்
முதலீடு செய்ய வரும் நபர்களை ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வரும் முதலீட்டாளர்களிடம் ஒதுக்கீடு எவ்வளவு என்று கேட்கிறீர்கள்.. அந்த ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு எவ்வளவு என கேட்கிறீர்கள். ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்றே முதலீட்டாளர்கள் தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்திற்கு ஓடுகின்றனர்... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது? இந்த ஓராண்டில் எத்தனை லாக்கப் இறப்புகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நடைபெற்று இருக்கின்றன.. இதில் திமுகவினர் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications