இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று!
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் இதுவரை 3.12 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9.64 லட்சமாகும்.

உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9.64 லட்சமாகும். கொரோனாவிலிருந்து இதுவரை 2.28 கோடி பேர் மீண்டுள்ளனர். 61,461 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சமாகும். இதுவரை 2.04 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,265 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 54 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 87,909 பேர் பலியாகிவிட்டனர். ஒரே நாளில் 87,382 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
பிரேசிலில் 45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.36 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 16,282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்த நாடுகளில் உலகளவில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில் தற்போது 3ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
-
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications